பக்கம் எண் :

வினையியல் 105

5. பலவின்பால்விகுதிகள் - அ, ஆ.


அ- உடன்பாட்டு விகுதி.
ஆ - எதிர்மறை விகுதி.
(மாடுகள்) ஓடின - அ (உடன்பாடு).
(செய்திகள்) வாரா - ஆ (எதிர்மறை).

கீழ்வரும் வாக்கியங்களைக் கவனித்துப் படியுங்கள்

ஒன்றன்பாலில்உடன்பாடு பலவின்பாலில் உடன்பாடு
வண்டி ஓடியது
சேவல் கூவிற்று
வண்டிகள் ஓடின.
சேவல்கள் கூவின.
ஒன்றன்பாலில் எதிர்மறை பலவின்பாலில் எதிர்மறை
வண்டி ஓடாது
செய்தி வராது
வண்டிகள் ஓடா
செய்திகள் வாரா.

இடைநிலைகள் (Middle Particles)

காலம் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என
மூவகைப்படும்.

இறந்தகாலமாவது தொழிலது கழிவு.

நிகழ்காலமாவது தொழில் தொடங்கப் பெறாத நிலைமை.

எதிர்காலமாவது தொழில் பிறவாமை.

தமிழில் வினைச்சொல்லில் இடைநிலைகளே பெரும்பாலும் காலம்
காட்டும்.

இறந்தகால இடைநிலைகள்
(Signs of Past Tense)

த்,ட்,ற், இன், ன், ய்

செய்தான் - செய்+த்+ஆன்-
கண்டாள் - காண்+ட்+ஆள்-
த்-
ட்-
இறந்தகால இடைநிலை
இறந்தகால இடைநிலை