பக்கம் எண் :

104நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


வியங்கோள் வினைமுற்று விகுதிகள்(Optative Verb Terminations)

வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - க, ய, அல், இயர், தல்,
இ, உம்.

வாழ்க - க.
வாழிய - ய.
செயல் - அல்.
வேண்டும் - உம்
(வேண்டு + உம்.)
வாழியர் - இயர்.
மாசிலனாதல் - தல்.
போற்றி - இ (போற்று + இ).

படர்க்கை வினைமுற்று விகுதிகள்

1. ஆண்பால் விகுதிகள் -
(கண்ணன்) எழுதுவன் -
(நண்பன்) எழுதுவான் -
அன், ஆன்
அன்
ஆன்.
2. பெண்பால் விகுதிகள் -
(மணிமேகலை) கூறினள் -
(கண்ணகி) கூறினாள் -
அள், ஆள்.
அள்
ஆள்.
3. பலர்பலர் விகுதிகள் -
(நண்பர்) கூறுவர் -
(பரிமேலழகர்) கூறுவார் -
(பெரியோர்கள்) கூறுவார்கள் -
(அறிஞர்) கூறுப, என்ப -
அர், ஆர், ஆர், + கள், ப.
அர்
ஆர்.
ஆர் + கள்.
ப.
4. ஓன்றன்பால் விகுதிகள் -
(நாய்) ஓடியது -
(பன்றி) உறுமிற்று -
து,று
து.
று.