(நாம்) கூறுவெம் -
(நாம்) கூறுவேம் -
(நாம்) கூறுவோம் - |
எம்.
ஏம்.
ஓம். |
குறிப்பு : ஏன் விகுதி தன்மை ஒருமைக்கும், ஓம் விகுதி
தன்மைப் பன்மைக்கும் பெரும்பாலும் வழக்கில் பயன்படக் காணலாம்.
முன்னிலை வினைமுற்று விகுதிகள்
முன்னிலை ஒருமை வினை முற்று விகுதிகள் -இ, ஐ, ஆய்.
(நீ) பாடுதி -
(நீ) பாடினை -
(நீ) பாடினாய் - |
இ.
ஐ.
ஆய். |
முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள் -இர், ஈர், ஈர் + கள்.
(நீர்) காண்பீர் -
(நீர்) காண்பீர் -
(நீங்கள்) காண்பீர்கள் - |
இர்
ஈர்.
ஈர் + கள். |
குறிப்பு : முன்னிலைப் பன்மையில் ஈர் விகுதி வரும்போது
சில வேளைகளில் கள் விகுதியைச் சேர்த்து எழுதுவது இக்கால வழக்கு.
ஏவல் வினைமுற்று விகுதிகள்(Imperative verb Terminations)
ஏவல் ஒருமை வினைமுற்று விகுதி - ஆய்
ஏவல் பன்மை வினைமுற்று விகுதிகள் - ஈர், மின்.
ஏவல் ஒருமை
(நீ) கேளாய்
(நீ) பாராய் |
ஏவல் பன்மை
(நீர்) கேளீர்
(நீர்) பார்மின். |
|