பக்கம் எண் :

102நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

செய் + வ் + ஏன் - இதில் ‘வ்’ எதிர்காலத்தைக் காட்டும்
வினையிடைநிலை.

வினைப்பகுதி (Root) எப்பொழுதும் கட்டளையிடுவது போல
இருக்கும். பகுதிக்குத் தமிழ்ப் பெயர் முதனிலை என்பது.
(முதல் + நிலை = முதனிலை.)

ஒடினான் -
பாடினாள் -
தேறினார் -
நடக்கிறது -
கண்டார் -
செத்தார் -
வந்தார் -
இதில் ஓடு என்பது பகுதி.
இதில் பாடு என்பது பகுதி.
தேறு என்பது பகுதி.
நட என்பது பகுதி.
காண் என்பது பகுதி.
சா என்பது பகுதி.
வா என்பது பகுதி.

விகுதி (Termination) என்பது ஒரு சொல்லின் ஈற்றில் நிற்பது.
விகுதியினால்தான் திணை, பால், எண் இவற்றிலுள்ள வேறுபாட்டைக்
கண்டு பிடிக்கலாம். வித்தியாசம் காட்டுவது விகுதி. இதற்குக் கடைநிலை
என்பது தமிழ்ப் பெயர்.

கீழ்வரும் விகுதிகளைக் கவனமாய்ப் பார்த்துத் தெரிந்த
கொள்க:

தன்மை வினைமுற்று விகுதிகள்

தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் - அன், என், ஏன்.

(நான்) செய்வன் -
(நான்) செய்வென் -
(நான்) செய்வேன் -
அன்.
என்.
ஏன்.

தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள் - ஆம், ஆம், எம்,
ஏம், ஓம்.

(நாம்) கூறுவம் -
(நாம்) கூறுவாம் -
அம்.
ஆம்.