பக்கம் எண் :

வினையியல் 101


உடன்பாட்டு வினையும் எதிர்மறை வினையும்

எல்லா வினைச்சொற்களும் உடன்பாட்டு வினை, எதிர்மறை வினை
என இருவகைப்படும். தொழிலின் நிகழ்ச்சியை உணர்த்துவது
உடன்பாட்டு வினை. தொழில் நிகழாமையையும் எதிர்மறுத்தலையும்
உணர்த்துவது எதிர்மறை வினை.

உடன்பாட்டுவினை
உண்பான்
கண்டான்
எதிர்மறை வினை
உண்ணான்
கண்டிலன்

பகுபத உறுப்பிலக்கணம் (Analysis of words)

சொற்களை நன்கறிந்து பயன்படுத்துவதற்கும் ஐயமறச் சொற்களை
அறிவதற்கும் பகுபத உறுப்பிலக்கணம் தெரிந்து கொள்வது நலம்
பயக்கும். தமிழ், ஒட்டுச் சொல்மொழி என்று முன்னரே கண்டோம்.
பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் ஆகியவற்றால்
சொற்கள் ஆகியிருப்பதைக் காணலாம். பெயர்ச் சொல்லாயினும்,
வினைச் சொல்லாயினும் சொற்கள் இவ்வாறு பிரிக்கப்படலாம்.

கண்ணன் - இதைக் கண் + அன் என்று பிரிக்கலாம்

பார்த்தனன் - இதனைப் பார்+த்+த்+அன்+அன் என்று பிரிக்கலாம்.

பகுதி (முதனிலை) ஒரு தொழிலைக் காட்டும்.

விகுதி (கடைநிலை) திணை, பால் முதலிய வேறுபாடுகளைக் காட்டும்.

இடைநிலை என்பது சொல்லுக்கு இடையில் நிற்பது. இடையில்
நிற்பது இடைநிலை. இந்த இடைநிலையானது பெயர் இடைநிலை எனவும்,
வினை இடைநிலை எனவும் இருவகைப்படும்.

வலை + ஞ் + அன் = இதிலுள்ள ‘ஞ்’ பெயரிடைநிலையாகும்.
இது காலத்தைக் காட்டாது.