வேண்டும். அப்படிச் செய்யாது போனது பெருங்குறையே ஆகும்."
மேய்ல் கூற்றிற்கு இணங்க அவருக்குச் சிறிது காலத்திற்கு முன்னரே
இருந்த பியேர் லொத்தி
(Pierre Loti) என்ற மற்றொரு பிரெஞ்சு
அறிஞர் குறிப்பிட்டிருப்பதையும் பார்ப்போம். அது
வருமாறு :
"இந்தியாவிற்குப்
பிரெஞ்சுக்காரர்கள் வந்ததன் பின் அந்நாட்டின்
மொழிகளுள் முதல் முதல் அவர்கள் கற்றுக் கொண்டது
தமிழ் மொழியே.
அந்த மொழி வாயிலாகவே தமிழ் நாட்டின் பழக்க வழக்கங்கள், சமூக
அமைப்புகள், சமயக் கோட்பாடுகள் முதலியவற்றின்
உண்மையான
தத்துவங்களை அறிந்த கொள்ள வழி ஏற்பட்டது.
"தமிழிலக்கியம் மிகவும் பரந்துபட்டது; மிக்க தொன்மை வாய்ந்தது.
மற்ற எந்த மொழியும் வரிவடிவம் அடைவதற்கு முன்னமே தமிழ்
எழுதப்பட்டு வந்தது. தமிழின் நெடுங்கணக்கு
(Tamil Alphabet) முழுத்தன்மையுடையது; முதல் தன்மையும் உடையது. இந்த
நெடுங்கணக்கை அமைத்த முறை மிக்க அறிவு சான்ற
தரத்தை
வெளிப்படுத்துகிறது. இந்த நெடுங்கணக்கில் மிக நுண்ணியதும்,
மிக நியதியுள்ளதுமான கண்ணோட்டத்தினை நாம் காண்கிறோம்.
இந்த நெடுங் கணக்குத் திடீரென்று ஏற்பட்டதன்று.
இலக்கணப் புலவா
ஒருவரின் அல்லது புலவர் கூட்டம் ஒன்றின் நுண்ணறிவுள்ள
நெடுங்காலப் பணியின் பயனாய் அமைந்ததாகும்."
இப்பிரெஞ்சு நாட்டு அறிஞர்கள் தமிழைப் பற்றிப்
பாராட்டியுள்ள செய்தியானது, புகழ்பெற்ற பிரெஞ்சு மொழி அறிஞரும்
பல தமிழ் நூல்களைப் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்தவருமான
ரா. தேசிகப் பிள்ளை அவர்கள் எழுதிய ‘தமிழகமும்
பிரெஞ்சுக்காரரும்’ என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
|