தெரியப்படுத்துதல் வேண்டும்" என்றார்.
ஜெர்மனி நாட்டவரும்
ஆங்கில நாட்டின் குடிமகனானவரும் அக்காலத்துத் தலை சிறந்த
மொழி நூல் வல்லுநராய் விளங்கியவரும், இருக்கு வேதத்தைச்
சாயனருடைய உரையுடன் பதிப்பித்தவருமாகிய மாக்ஸ் முல்லர்
(Max Mueller), "தமிழ் மிகப் பண்பட்ட மொழி, தனக்கே
உரியதாக
இயல்பாய் வளர்ந்த சிறந்த இலக்கியச் செல்வமுள்ள மொழி"
என்றார்.
இன்றைய மொழி நூலறிஞரான திரு. கமில் சுவலபில்
(Kamil
Zovelebil)*, "தமிழ், உலகத்தில் இருக்கும் மிகப் பெரிய பண்பட்ட
மொழிகளும் ஒன்று. இஃது உண்மையிலேயே அச்சொற்றொடருக்கு
ஏற்றவாறு உயர் தனிச் செம்மொழியாக
(Classical Language)
இருப்பதோடு கூட இன்றும் பேச்சு மொழியாகவும் இருக்கிறது"
என்று தமது ‘தமிழ் இலக்கண நெறி வரலாறு’
(Historical Grammar of
Tamil) என்னும் நூலில்
குறிப்பிட்டிருக்கிறார்.
இனிப் பிரெஞ்சு நாட்டுத் தமிழறிஞர் இருவர் தமிழ் மொழியின்
சிறப்பைப் பற்றிக் கூறியுள்ளதைக் காண்போம்.
பேராசிரியர் மேய்ல்
(Meil)
என்பார் கூறியதாவது :
"தமிழர்கள் நல்ல
பண்புடையவர்கள். இயற்கையாகவே இந்த
நற்பண்பு அவர்களிடத்தில் அமைந்திருக்கிறது.
இதற்காகவேனும் நாம்
அவர்கள் மொழியாகிய தமிழைக் கற்பது நன்று... அவர்களுடைய
மொழியாகிய தமிழ் இலக்கியம் விந்தையும் வியப்பும் தரத்தக்கதாய்
வற்றாத உயர் எண்ணங்களின் ஊற்றாய் இருக்கிறது. தமிழ் மொழி
இந்தியாவின் மொழிகளுள் மிகப் பழமையானது. அதுவே முதல்
மொழியாயும் இருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.
அஃது உயர்தனிச்
செம்மொழி. அம்மொழியை நெடுங்காலத்திற்கு
முன்னரே
பிரெஞ்சுக்காரர்கள் கற்றிருத்தல்
---------------------------------------
*"Tamil is one of great cultural languages of the world. It is classical language in the true sense of the term and it is at the same time as living language."
|