பக்கம் எண் :

10நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


நில்லாமல், தமிழ்மொழி மேல் அளவற்ற அன்பு பூண்டு தம் கல்லறையின
மேல் "இங்கே தமிழ் மாணவர் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்" என்று
கல்லில் பொறித்து வைக்குமாறு விருப்புமுறி (will) எழுதி வைத்தார்.
இவருக்கிருந்த தமிழ்ப்பற்றை என்னென்று பாராட்டுவது! இந்த அளவு
செந்தமிழ் மொழி, அந்தப் போப்பையர் உள்ளத்தைக் கொள்ளை
கொண்டது.

மொழி நூலறிஞர் டாக்டர் கால்டுவெல் துரைமகனார், "தமிழ்
பண்டையது; நலம் சிறந்தது; உயர்நிலையில் உள்ளது;... விரும்பினால்
வடமொழி உதவியின்றி இயங்கவல்லது" என்றார். கிரியர்சன் என்ற
மற்றொரு ஐரோப்பிய அறிஞர், "திராவிட மொழிகளுள் தமிழ் மொழியே
மிகத்தொன்மை வாய்ந்ததும் பெருவளம் பொருந்தியதுமாகும். மிகவும்
சீர்திருந்தியதுமான உயர் தனிச் செம்மொழியுமாகும்; சொல்வளமும்
மிகுந்தது, அளவிடவொண்ணாப் பண்டைக்காலம் முதல் பயின்றும்
வருவது" என்றார். சிலேட்டர் என்பார், "திராவிட மொழிகள்
எல்லாவற்றுள்ளும் மக்கள் பேச்சு மொழிக்குரிய தன்மையைப்
பெற்றுள்ள மொழி தமிழ்மொழி; தர்க்க அமைப்புடையதும் தமிழ்
மொழியே" என்றார். விட்னி என்ற ஓர் ஐரோப்பிய அறிஞர் தம்மிடம்,
தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழை நன்கு கற்றுத் தமிழரைப்
போலவே எழுதவும் பேசவும் வல்லவராய் விளங்கிய அமெரிக்கர்
ஒருவர் தமிழ்மொழி எண்ணுவதற்கும் பேசுவதற்கும் எந்த ஐரோப்பிய
மொழியையும் விடச் சிறந்தது என்று கூறியதாய் எழுதியிருக்கிறார்.

ஜான் மர்டாக் என்ற ஐரோப்பிய அறிஞர், "சீரிய மொழியாயும்
அழகிய இலக்கியங்கள் உடையதாயும் விளங்குவது தமிழ் மொழியே"
என்றார்.
F.W.கெல்லட் என்பார், "எந்த நாட்டினரும் பெருமை
கொள்ளக்கூடிய இலக்கியம் தமிழ் இலக்கியம்" என்று தமிழைப்
பாராட்டியுள்ளார்.

சார்லஸ் கவர் என்பவர், "தெலுங்கு மொழியின் மெருகு
நிலையும் அருந்தமிழ்ப்பா நலமும் ஐரோப்பாவில் மிகுதியாகத்