|
இந்நாட்டின் நிலக்கொடை இயக்கத் தலைவரும், அரபு மொழி,
சமஸ்கிருதம், மராத்தி, இந்தி, பிரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி
முதலிய பதினெட்டு மொழிகளைக் கற்றவரும், ஏற்றமிகு
பேரறிஞரும்,
தவஞானச் செல்வருமான காலஞ் சென்ற வினோபா முனிவர்,
தமது
1956-ஆம் ஆண்டு தமிழகச் சுற்றுப்பயணத்தில் ஈரோட்டில்
ஆற்றிய
சொற்பொழிவில், "தமிழக அரசு தமிழ் மொழியை வெற்றியுடன்
திறம்பட
ஆட்சி மொழியாக மாட்சியுடன் பயன்படுத்தக் கூடும். மொழியின் வளம்
அதன் வினைச் சொற்களில் நன்கு அமைந்து கிடக்கிறது. தமிழ்
மொழியோ இலத்தீன் மொழியைப் போன்று அளவற்ற வினைச்
சொற்களைக் கொண்டு விளங்குகின்றது" என்று தமிழ் மொழியின்
சொல் வளம் பற்றிக் குறிப்பிட்டார்.
"தென்னிந்திய மொழிகளுள் பழமையானதும் பண்பட்டதும்
தமிழ்
மொழியே" என்று
M.சீனிவாச
ஐயங்கார் தமது ‘தமி்ழ் மொழி ஆராய்ச்சி’
என்னும் நூலில் எடுத்துக் காட்டியிருக்கிறார்.
ஐரோப்பிய அறிஞர்கள் கூறியவை
செந்தமிழ் மொழியை நன்கு பயின்ற ஐரோப்பிய அறிஞர்
பெருமக்களும், மேலை நாட்டு மொழிநூல் வல்லுநர்களும் தமிழின்
அரிய தன்மைகளை நடுவு நிலைமையில் நின்று எடுத்துக்
காட்டியிருப்பது
காண்க. வின்ஸ்லோ என்ற அறிஞர், "செய்யுள்
தன்மையில் கிரேக்க
மொழியினையும், இலக்கியப் பெருமையில் இலத்தீன் மொழியினையும்
வெல்ல வல்லது தமிழ்மொழி" என்றார். மேலும்
அவரே, "அதன் (தமிழ்)
பெயரே இனிமை என்று பொருள்படுவதற்கு ஏற்ப, அதனிடத்தில்
கேட்டாரைத் தம் வசமாக்கும் இனிமை பொருந்தியிருப்பதற்கு
ஐயமில்லை" என்று கூறியுள்ளார். டெய்லர் என்பார், "அது (தமிழ்)
நிறைந்து தெளிந்து ஒழுங்காயுள்ள மொழிகளுள் மிகவும்
சிறந்ததொன்றாகும்" என்று மொழிந்துள்ளார். டாக்டர்
G.U.
போப்
பாதிரியார், "தமிழ்மொழி எம்மொழிக்கும் இழிந்த மொழி
அன்று" என்று
கூறியதோடு
|