பக்கம் எண் :

சேர்த்து வைத்த குப்பை 129

ண,ழ,ள,ற,ன என்னும் வரிசையில் உள்ள எந்த எழுத்தும்
சொல்லுக்கு முதலில் வருவதில்லை. அப்படி எழுதுவோரும் இரார்.
ஒரு சிலர் றாமசாமி என்று எழுதுகின்றனர். அப்படி எழுதுவது தவறு.

யி,யீ,யெ,யே,யை,யொ;வு,வூ,வொ,வோ, என்னும் எழுத்துகள்
சொல்லுக்கு முதலில் வருதல் கூடாது. சந்தி சேர்த்து எழுதும்போது
அவை வரும். யிலை என்று எழுதுவது தவறு. வாழை + இலை என்னும்
இரண்டு சொற்களைச் சந்தி சேர்த்து வாழையிலை என்று எழுதலாம்.
உங்கள் வோட்டை
(Vote) அளியுங்கள் என்று எழுதுதல் கூடாது.
உங்கள் வாக்கை அளியுங்கள் என்று எழுதுக. யேசு என்று சொல்லை
ஏசு என்று எழுதும்போது வேறு பொருள்படுவதால், விவிலிய நூலை
(Bible) மொழி பெயர்த்தவர்கள் இலக்கணத்தைப் பற்றிக் கவலைப்படாது
யேசு என்று கொண்டு இகரத்தைச் சேர்த்து இயேசு, இயேசுநாதர் என்று
எழுதினார்கள்.இதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இக்காலத்தில் "ற்" என்னும் வல்லின மெய் மட்டும் சொல்லுக்கு
இறுதியில் நில்லாது என்று நினைவு வைத்துக் கொள்வது போதுமானது.

தகர வரிசைக்குமுன் இந்த "ந்" வரும்.

டகர வரிசைக்கு முன் இந்த "ண்" வரும்.

றகர வரிசைக்கு முன் இந்த "ன்" வரும்.

சந்து, மந்தி; வண்டி, துண்டு; என்றார், கன்று.

இவ்வெடுத்துக் காட்டுகளிலிருந்து இங்ஙனம் வருவதை நன்கு
அறியலாம்.

சன்து, துன்டு, கண்று என்று எழுதுவது தவறாகும்.