பக்கம் எண் :

130நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

ற், ட் என்னும் வல்லின மெய்களுக்குப் பின் எந்த
மெய்யெழுத்தும் வாராது. பயிற்சி, நட்பு என்னும் சொற்களைக் கண்டு
தெரிந்து கொள்ளலாம்.

இடையினமாகிய "ர்" என்னும் மெய்யெழுத்துக்குப் பின் வேறு
மெய்யெழுத்து வரும். "பார்ப்பதற்கு" என்னும் சொல்லில் இடையின "ர்"
என்னும் மெய்க்குப் பின் வேறு மெய் வருதலும், வல்லின "ற்" என்னும்
மெய்க்குப் பின் வேறு மெய் வாராதிருத்தலும் காண்க.

கீழே பலர் அடிக்கடி செய்யும் எழுத்துப் பிழைகளுக்குத்
திருத்தங்கள் தரப்பட்டுள்ளன.

பிழை
அடமானம்
அடமழை
அனியாயம்
அருவெறுப்பு
இராமனாதபுரம்
இடதுபக்கம்
உந்தன்
உத்திரவு
உடமை
ஊரணி
எண்ணை (number)
எதுகள்
எல்லோரும்
ஏமாந்து போனான்
ஒருவள்
கத்திரிக்கோல்
திருத்தம்
அடைமானம்
அடைமழை
அநியாயம்
அருவருப்பு
இராமநாதபுரம்
இடப்பக்கம்
உன்றன்
உத்தரவு
உடைமை
ஊருணி
எண்ணெய் (oil)
எவை
எல்லாரும்
ஏமாறிப் போனான்
ஒருத்தி
கத்தரிக்கோல்