so like என்பவை
such என்றும்,
who like என்பவை
which
என்றும்
மாறியிருப்பது உட்பிணைப்பு நிலை மொழிக்கு எடுத்துக் காட்டுகளாகக்
கூறுவர். கிரேக்க மொழியில் ஒரு வினைப்பகுதி 268 வகையாகத்
திரியுமாம். வடமொழியில் ஒரு வினைப்பகுதி 891 வகையாகத்
திரியுமாம்.
அடிச்சொற்கள் இரண்டும் பலவும்
ஒட்டி நிற்கும் நிலை
ஒட்டுநிலை என்பது. தமிழ்மொழி இவ்வகையைச்
சார்ந்தது.
பார்+த்+த்+அன்+அன் என்பவை ஒன்று சேர்ந்து
பார்த்தனன்
என்றாவதைத் தமிழில் காணலாம். இதனால், தமிழைப்
பகுதி, விகுதி,
சாரியை, சந்தி, இடைநிலை, விகாரம் என்பவற்றை உணர்ந்து
தவறின்றி
எழுத முடியும். ஆங்கிலத்தைப் போல இறந்த காலத்தைக் காட்டத்
தமிழ் வினைச் சொற்களை மாற்றாமல் எழுதலாம். ஆங்கிலத்தில்
go
என்பதை இறந்த காலத்தைக் காட்ட went என்று மாற்ற வேண்டும்.
அது போன்ற நிலை தமிழுக்கு இல்லை. தமிழி்ல் செய்கிறான்
என்பதை செய்தான் என்று கால இடைநிலையை மாற்றியமைத்தால்
இறந்த காலம் வந்துவிடும். இது தமிழ் மொழிக்கு இருக்கும் மற்றொரு
தனிச் சிறப்பாகும்.
தமிழிலிருக்கும் தொகைகள் புதுச்சொற்களை ஆக்குவதற்குப்
பெரிதும் பயன்படும்; சொற் சிக்கனத்திற்கும் உதவும்,
"Beware of Dogs’
என்றும் ஆங்கிலத் தொடருக்கு, ‘கடிநாய்’ என்னும் சிறுவினைத்
தொகை
நிலைத் தொடரே போதுமானது. “இது நேற்றுக் கடித்த நாய், இன்று
கடிக்கிற நாய்; நாளைக்கும் கடிக்கும் நாய்; ஆதலால், விழிப்பாய்,
இரு" என்னும் நீண்ட பொருள் இச்சிறு தொடரில்
அமைந்திருத்தலை
உணரலாம். தமிழ் அறிவு இருந்தால் நாம் சிக்கனமாகச்
சொற்களைப்
பயன்படுத்தலாம். சுடுகாடு என்னும் வினைத்தொகை, விரிந்த தத்துவத்தை
நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். சிந்தனை செய்து பாருங்கள்.
இதுவும் தமிழுக்குரிய தனிச்சிறப்பு என்று சொல்லத்
தேவையில்லை.
தமிழ்மொழியின் இலக்கணமே
தனிச்சிறப்புடையது; நுண்ணிய
அறிவை உண்டாக்கவல்லது. முற்கூறிய F.W.கெல்லட்
என்பார்,
|