"இதன் (தமிழ்) இலக்கணம் படிக்கப் படிக்க
விருப்பத்தை
உண்டாக்குவது" என்று கூறியிருக்கிறார்.
விருப்பம் வந்து விட்டால்
தமிழ் இலக்கணம் அருமையாக இருக்கும். புணர்ச்சி யிலக்கணம்
ஓரளவு அறிந்தால்தான் சில நுட்பங்களை அறிந்த பொருள்
தெரிந்து
கொள்வது இயலும்.
அலைகடல் என்னும் சொற்றொடருக்கும்,
அலைக்கடல் என்னும
சொற்றொடருக்கும் பொருள் வேறுபாடு உண்டு. முன் தொடருக்கு
அலைகின்ற கடல் என்று பொருள் கூறவேண்டும்; பின்னுள்ள
தொடருக்கு அலையையுடைய கடல் என்று பொருள் கொள்ள
வேண்டும். ‘க்’ மிகுவதால் பொருளில் அவ்வேறுபாடு
தோன்றுகிறது.
பெரியார் கண்டார், பெரியார்க்
கண்டார் ஆகிய இவ்விரண்டு
சொற்றொடர்களிலும் மிகுந்த பொருள் வேறுபாடு
உண்டு. முன்னுள்ள
சொற்றொடரில் பெரியார் மற்றொருவரைக் கண்டார் என்பது பொருள்;
பின்னுள்ள சொற்றொடரில் மற்றொருவர்
பெரியாரைக் கண்டார்
என்பது பொருள். இப்பொருள் வேறுபாடு எப்படி உண்டாகிறது?
ஒன்றில் வல்லெழுத்து மிகவில்லை; மற்றொன்றில்
வல்லெழுத்து
மிகுந்திருக்கிறது. வல்லெழுத்து மிகுந்ததனால் வேறு பொருள்
உண்டாகிறது.
‘பெண்மையுடைய பெண்கள் நடந்தார்கள்’ என்பது ஒரு
வாக்கியம். ‘பெண்மையுடையப் பெண்கள் நடந்தார்கள்’
என்பது
மற்றொரு வாக்கியம். ஒன்றுக்கு மற்றொன்று எவ்வளவோ
மாறுபாடான
பொருளைக் கொடுப்பதைக் காணுங்கள். முதல் வாக்கியத்திற்குப்
பெண்தன்மை கொண்டுள்ள பெண்கள் அப்பெண்தன்மைக்குரிய
முறையில் பண்பாட்டுடன் நடந்து சென்றார்கள் என்பது பொருள்.
இரண்டாவது வாக்கியத்திற்குப் பெண்தன்மை அற்றுப்
போகும்படியாய்ப்
பெண்கள் பண்பாடற்ற வகையில் நடந்து சென்றார்கள்
என்பது பொருள்.
‘ப்’ மிகுந்ததால் இம்மாறுபாட்டைக் காண்கிறோம்.
தயிர் எங்குக் கிடைக்கும்? தயிர் எங்கும் கிடைக்கும். இவற்றுள்
முன்னது வினா; பின்னதிலுள்ள எங்கு என்னும் சொல்லோடு உம்
சேர்ந்து பொருளே மாறிவிட்டது.
|