பக்கம் எண் :

விட்டு விட்ட குப்பை 141

கண்டு களிகூருங்கள் என்றால் கண்டு மகிழ்ச்சி மிகுதியாகக்
கொள்ளுங்கள் என்பது பொருள். கூர்தல் - மிகுதல். கூறுதல் என்றால்
சொல்லுதல் என்பது பொருளாகும். எல்கை என்பது தவறு. அருகாமை
என்பதும் பிழையானது. எல்லை என்றும் அருகில் என்றும் எழுதுக.

பெரிய என்னும் சொல்லில் சிறிய ‘ரி’ இருக்கும் என்றும், சிறிய
என்னும் சொல்லிய பெரிய ‘றி’ இருக்கும் என்றும் நினைவு வைத்துக்
கொண்டால் தவறு வருமோ? வாராதே.

கறுப்பு
சிவப்பு
குடல்
மதில்
செதில்
ஐயர்
அவ்வையார்
வரட்சி
அக்கரை
சில்லரை
நிலயம்
வேண்டா
கருப்பு
சிகப்பு
குடர்
மதிள்
செதிள்
அய்யர்
ஒளவையார்
வறட்சி
அக்கறை
சில்லறை
நிலையம்
வேண்டாம்

ஆகிய இவ்விரட்டை முறையில் எழுதப்படுவனவற்றுள் எது
திருத்தமானது என்னும் ஐயம் ஏற்படுவது இயல்பு.

கருப்பூரம், கற்பூரம் - இவை இருவகையாகவும் எழுதப்படும்.

கருப்பண்ணன் என்பதா? கறுப்பண்ணன் என்பதா? கருப்புசாமி
என்று எழுதுவதா? கறுப்புசாமி என்று எழுதுவதா? என்று ஒருவர்
ஐயுறலாம். தொல்காப்பிய இலக்கண நூலில் உரி இயலில், ‘கறுப்பும்
சிவப்பும் வெகுளிப் பொருள’ என்று 372-ஆவது நூற்பா குறிப்பிடுகிறது.
இதன் பொருள் கறுப்பும்