|
வரட்சி, வறட்சி என்பவை அகராதியில் இருவகையில்
காணப்படினும், வறட்சி என எழுதுவதோ மொழி நூற்படி
பொருத்தமாகும்.
அக்கரை, அக்கறை என்னும் இவற்றுள் அக்கறை என எழுதுவது
வேறு பொருள் கொடாமல் இருக்கும். அக்கறை என்பது கன்னடச் சொல்.
சில்லரை, சில்லறை ஆகியவற்றுள் சில்லறை என்று எழுதுவது
நலம். சில்லறை என்பது தெலுங்குச் சொல். சிலவாக அறுத்தல் என்பது
பொருள்.
நிலயம், நிலையம் - இவற்றுள் நிலையம் என்று எழுதுவதே
தக்கது. நிலையம் என்று சொல்லுக்கு நிலை என்பது பகுதியாகும்.
வேண்டாம் என்பது தவறாயினும் இன்று அஃது ஒப்புக்
கொள்ளப்பட வேண்டிய நிலையை அடைந்து விட்டது. வேண்டாவாம்
என்பது வேண்டாம் என மருவிற்றுப் போலும்.
பழமை என்னும் பண்புச் சொல்லும் பழம்பொருள் என்னும்
பண்புத் தொகையும் ழகரம் பெற்றே வரும். "முன்னைப் பழம்
பொருட்கும் முன்னைப் பழம் பொருளே" என்னும் திருவாசக அடியில்
‘ழ’ வருதலைக் காண்க. பழைய என்னும் பெயரெச்சம் ‘ழை’ பெற்றே
வரும். பழமை என்னும் சொல்லின் வடிவம் பழைமை என்பதே.
எனினும், பழமை என்னும் சொல்லே பெருவழக்காக வழங்கி வருகிறது.
இது மரூஉ.
இளமை, இளைஞர், இளைய - இவற்றை இப்படித்தான்
எழுதவேண்டும்.
எழுத்து வேறுபாடு தெரியாமல் சிலர் எழுதுகின்றனர். ஓர்
எழுத்துக்கு மாறாக மற்றோர் எழுத்தை எழுதினால் பொருளே
மாறுபடும். அறை என்பதற்கு மாறாக அரை என்றெழுதினால்
|