பக்கம் எண் :

விட்டு விட்ட குப்பை 145

கரை -கடற்கரை,ஆற்றங்கரை.

சீரடி -சீர்மையுடைய அடி

கறை -மாசு

சீறடி -சிறிய அடி

கரையான் -வலைஞன்

சொரி -பொழி

கறையான் -செல் (White ant)

சொறி -தினவு, சுரசுரப்பு.

குரவர் -பெரியோர் (சைவசமய குரவர்)

துரவு -பெரிய கிணறு

குறவர் -குற சாதியினர்

துறவு -துறந்துவிடுதல்

குற்றுதல் -நெல் குற்றுதல்

துரத்துதல் -ஓட்டுதல்

குத்துதல் -உடம்பில் குத்துதல்

துறத்தல் -விட்டுவிடுதல்

குரை -to bark, ஒருவகை ஒலி.

துரை -பிரபு

குறை -குறைபாடு, சுருக்கு.

துறை -நீர்நிலையில்இறங்குமிடம்

கூரிய -கூர்மையான

நரை -வெண்மயிர்

கூறிய -சொல்லிய

நறை -வாசனை

கூரை -மேற்கூரை (கூர்கள்
சேர்வது)

நிரை -வரிசை, பசு மந்தை.

கூறை -புதுத்துணி (கூறுபடுத்துவது என்பது
பொருள்)

நிறை -எடை (Weight)

கோருதல் -விரும்புதல்

பரந்த -பரவிய

கோறல் -கொல்லுதல்

பறந்த -பறந்துவிட்ட

சிரை -மயிரை நீக்கு

பரவை -கடல்

சிறை -சிறைச்சாலை

பறவை -பட்சி

பாறை -கடப்பாரை (Crowbar)

பாறை -கற்பாறை (Rock)

பிரை -உரை

பிறை -பிறைச்சந்திரன்