|
ஒன்றன் வெவ்வேறு நிலையை
நன்கு காட்டுதற்கும்,
ஒன்றற்கும் மற்றொன்றிற்கும் உள்ள வேறுபாட்டை
உணர்த்துவதற்கும்
தமிழ் மொழியில் சொற்கள் உண்டு.
அரும்பு, போது, மலர், அலர், வீ என்பவை ஒரு பூவின்
வெவ்வேறு நிலையைக் காட்டும். அரும்பு என்பது மொட்டு. போது
என்பது மலரும் நிலையில் இருப்பது. மலர் என்பது விரிந்த பூ. அலர்
என்பது நன்றாக மலர்ந்த பூ. நன்றாக மலர்ந்து விழுந்தது வீ. இவை
ஒரு பூவின் வெவ்வேறு நிலையைக் காட்டுகின்றன.
ஈ, தா, கொடு. இவற்றின் வேற்றுமையைப் பாருங்கள். யாசிப்பவன்
ஈ எனக் கேட்க வேண்டும். சமநிலையில் உள்ளவன் தா எனக்
கூறவேண்டும். உயர்நிலையில் உள்ளவன் தன்னைவிடத்
தாழ்நிலையில் இருப்பவனைக் கேட்கும்போது கொடு எனச் சொல்ல
வேண்டும்.
இப்படியே உண்ணலுக்கும் தின்னலுக்கும் சொற்களைப்
பயன்படுத்தும் முறையில் வேறுபாடு உண்டு. பசியடங்க வயிற்றை
நிரப்புதலை உண்ணல் என்றும், சிறிய அளவு உட்கொள்ளுதலைத்
தின்னல் என்றும் கூறவேண்டும். சோறு உண்டான் என்க. முறுக்குத்
தின்றான் என்க.
அறிவியல் நூல்கள் எழுத முடியும்
இவ்வளவு தனிச்சிறப்பும்
சொல்வளமும் உள்ள தமிழ்
மொழியில் அறிவியல் நூல்களை எழுத இயலாதா? ஏன் இயலாது?
முயன்றால் இயலும், அறிவியல் தேர்ச்சியும் மொழித் திறனும்
பெற்றுவிட்டால், எவரும் அறிவியல் நூலைத் தவறின்றி எழுத இயலும்
என்று அஞ்சாமல் கூறலாம்.
இன்றைய நிலை என்ன?
தமிழகத்தில் இன்றைய நிலை என்ன? பலர் தங்கள் பெயர்களைக்
கூடத் தமிழில் பிழையின்றி எழுத இயலாதவர்களாய் இருக்கிறார்கள்.
ரங்கநாதன் அல்லது அரங்கநாதன் என்று எழுத வேண்டுவதை
ரெங்கநாதன் இன்றும் இரங்கநாதன் என்றும் பலர்
ந3
|