பக்கம் எண் :

18நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


எழுதுகின்றனர். வேங்கடசாமி என்று எழுத வேண்டிய பெயரை
வெங்கடசாமி என்றும், வெங்கிடசாமி என்றும்; வேங்கடராமன் என்று
எழுத வேண்டிய பெயரை வெங்கடராமன் என்றும், வெங்கட்ராமன்
என்றும்; வேங்கடாசலம் என்றும் எழுத வேண்டியதை வெங்கடாசலம்
என்றும், வெங்கிடாசலம் என்றும்; சீனிவாசன் என்று எழுத
வேண்டுவதைச் சீனிவாசகன் என்றும் தவறாக எழுதுவதைப்
பார்க்கிறோம். இந்த நிலையில் தமிழனுக்குத் தமிழ்த் தேர்ச்சி
வேண்டுமா என்று ஒரு சிலர் வீண்வாதம் புரிகின்றனர். தமிழர்களாய்
இருந்தாலும் தமிழில் ஓரளவு தேர்ச்சி பெற்றால்தான், இவர்கள்
பிழையின்றித் தமிழ் எழுத முடியும். பலர், அரசியல் அறிவும்,
ஆங்கில அறிவும், பொது அறிவும் பெற்றிருந்தாலும் தமிழ்த்
தேர்ச்சியின்மையால், நாளிதழ்களிலும், வார, மாத ஏடுகளிலும்
நல்ல தமிழ் எழுத இயலாதவர்களாய் இருப்பதைக் காண்கிறோம்.
மொழித் தேர்ச்சியில்லாத எழுத்தாளர்கள் சிறுகதையும், நெடுங்கதையும்,
நாடகமும் தவறான தமிழில் எழுதுகிறார்கள். இவர்கள் சிறிது மொழித்
தேர்ச்சி பெற்று விட்டால், இவற்றை நல்ல தமிழில் எழுதலாம். இவர்கள்
எழுதுபவையும் இலக்கியங்களாக இலங்கும். இப்பொழுதுள்ள எழுத்தாளர்
பலர் நல்ல தமிழில் எழுதுகின்றனர். இனி நல்ல தமிழ் வளரும்.

இன்று தமிழ்மொழி அரசியல் மொழியாகிவிட்டது; அலுவலக
மொழியாகிவிட்டது; ஆட்சி மொழியாகிவிட்டது; ஓரளவு கல்லூரிப்
பாடமொழியாகவும் ஆகிவிட்டது. தமிழ்மொழி தனக்குரிய இடத்தை
ஓரளவு அடைந்துவிட்டது. தமிழன்னை அரியணை ஏறிவிட்டாள்.
இன்று தமிழ் வெளியீடுகள் பெருகிக் கொண்டிருக்கின்றன.
எழுத்தாளர்களுக்கும் அலுவலகங்களில் பணி புரியும் அதிகாரிகளுக்கும்
எழுத்தர்களுக்கும் நல்ல தமிழ் எழுத வேண்டிய இன்றியமையாமை
ஏற்பட்டுவிட்டது. தமிழ் தெரியாது என்று சொல்லிப் பெருமைப்பட்ட
நாள் மலையேறிவிட்டது. நல்ல தமிழ் எழுத இயலவில்லை என்றால்,
எவரும் நன்மதிப்படைய