|
தமிழ்ச் சொற்களுக்கு மாறாகச் சிலர் வடசொற்களைப் புகுத்தும்
போது பொருளறியாது எழுதுவதைக் காண்கிறோம். சில திருமண
அழைப்புகளில், "எங்கள் கிரகத்தில் நடைபெறும். பாணிக்கிரகண
மஹோற்சவத்திற்குத் தாங்கள் தங்கள் இஷ்டஜன பந்துமித்திரர்களுடன்
விஜயஞ் செய்து மேற்படி வதூவரர்களை ஆசீர்வதிக்குமாறு
கோருகின்றனன்" என்று எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இந்த
வாக்கியத்தில் எழுத்துப் பிழையால் வந்துள்ள அமங்கலத்தை நோக்கும்
போது ஏன் தமிழ்ச் சொல்லாகவே எழுதக்கூடாது என்னும் எண்ணமே
தலையெடுத்து நிற்கும். கிரகத்தில் - வானில் உள்ள கோளில் என்பது
பொருள் கிருகம் என்று எழுத வேண்டும். கிருகம் - வீடு.
தமிழாக எழுதினால் அவ்வாக்கியம் கீழ்கண்டவாறு அமையும்:
"எங்கள் இல்லத்தில் நடைபெறும் திருமணத்திற்குத் தாங்கள்
தங்கள் உற்றார் உறவினர் நண்பர் சூழ வந்து மணமக்களை
வாழ்த்தும்படி வேண்டுகிறேன்."
"வடசொற்களை அறவே நீக்கி எழுத முடியுமா? அப்படி
எழுதினால் எழுதுவது விளங்குமா?" என்று சிலர் வினவலாம்.
"கூடிய மட்டும் வடசொற்களை நீக்கி எழுத முடியாதா?" என்று
கேட்கிறேன். முடியும். இதற்கு முன்னே குறிப்பிட்ட மொழி
நூலறிஞர் கால்டுவெல் அந்நூலில் மேலும் கூறியிருப்பதே தக்க
விடையாகும். அது வருமாறு:
"இப்பொழுது வடமொழியை அறவே நீக்குவது என்பது
தெலுங்கு மொழிக்கு அரிதாகும்; கன்னட மொழிக்கு மிகவும் அரிது;
மலையாள மொழிக்கு அரிதினும் அரிது. இஃது உண்மை. இம்மொழிகள்
கணக்கு வழக்கு இல்லாது வடசொற்களைக் கடன் வாங்கி
எடுத்தாண்டுள்ளமையாலும் வடசொற்களின் உதவியை
|