Skin amp; Hides Co - தோல் அதன் கூட்டகம்.
Flour Mill - மாவரைப்பு ஆலை.
Rice Mill - நெல் அரைவை ஆலை.
Cotton Mill - பஞ்சாலை.
அலுவலர்
Overseer - மேற்பார்ப்பவர்.
Health Officer - நல அலுவலர்.
Sanitary Inspector - துப்புரவு ஆயுநர்.
Compounder - மருந்தாளர்.
Enema - நீரேற்றி.
X.Ray - உள்நிலைகாட்டி.
திட்டங்கள்
Hydro Electric Scheme - நீர்மின் திட்டம்.
Water Supply Scheme - நீர் வழங்கு திட்டம்.
Drainage Scheme - வடிகால் திட்டம்.
Underground Drainage System - புதை வடிகால் திட்டம்.
National Extension Scheme - தேசிய வளர்ச்சித் திட்டம்.
Small Scale lndustries Scheme - சிறு கைத்தொழில் திட்டம்,
இங்குள்ள ஆட்சிமொழிச் சொற்கள், மிகக் குறைவானவையாயினும்,
ஓரளவு பயன்படும் இச்சொற்கள் நிரம்ப வெளிவந்து கொண்டிருக்கின்றன,
இவை முதலில் புதுமையாகத் தோன்றினும், நாளடைவில் வழக்கத்தில்
வரக்கூடிய நிலையை அடையும், ஆட்சிமொழிச் சொற்களைப்
பயன்படுத்துவதில் கருத்து வேறுபாடு உண்டு, நாம் நடுவழியைக்
கைக்கொள்வோம், அமைக்க முடியாதவற்றிற்கு மட்டும் பிறமொழிச்
சொற்களைப் பயன்படுத்துவோம்; மற்றவற்றிற்குத் தமிழ்ச் சொற்களை
ஆக்கிப் பயன்படுத்து
வோம். தமிழன்னை அன்றுபோல் இன்று அரியணை ஏறியமர்ந்து
விட்டாள், சட்டசபையில் தமிழகம் அமைந்த பின்பு வரவுசெலவுத்
திட்டப்பேச்சு தமிழில் நிகழ்கிறது, இன்று தமிழ்நாட்டின் ஆட்சி, தமிழ்
மொழியில் மாட்சியுற நடைபெறத் தொடங்கிவிட்டது,
|