விழு + பொருள் =
பொது + பணி =
அணு + குண்டு =
|
விழுப்பொருள்.
பொதுப்பணி.
அணுக்குண்டு.
|
7. இரண்டாம் வேற்றுமை உருபின் பின்னும் நான்காம்
வேற்றுமை உருபின் பின்னும் வரும் வலி மிகும்.
பூனையை +
பார்த்தான் =
கடைக்கு + போனான் =
|
பூனையைப்பார்த்தான்.
கடைக்குப்போனான்.
|
8. பண்புத் தொகையில் வரும் வல்லெழுத்து மிகும்.
வெள்ளை + தாள் =
மெய்+ பொருள் =
பொய் + புகழ் = |
வெள்ளைத்தாள்.
மெய்ப்பொருள்.
பொய்ப்புகழ். |
9. இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வரும் வலி மிகும்.
தை + திங்கள் =
கோடை + காலம் =
மல்லிகை + பூ =
|
தைத்திங்கள்.
கோடைக்காலம்.
மல்லிகைப்பூ.
|
குறிப்பு; ஆஸ்திரேலியா கண்டம், ஆப்பிரிக்கா கண்டம், இவை
பிறமொழிப் பெயராகையால் இவற்றில் வலி மிகுதல் கூடாது.
10. உவமைத் தொகையில் வரும் வலி மிகும்.
ரொட்டி + தலை =
தாமரை + கண் =
முத்து + பல் =
|
ரொட்டித்தலை.
தாமரைக்கண்.
முத்துப்பல்.
|
11. நான்காம் வேற்றுமைத் தொகையில் அஃறிணைப் பெயர்களின்
பின் வரும் வலி மிகும்.
|
வேலி + கால் =
|
வேலிக்கால்.
|
|