பக்கம் எண் :

வலிமிகும் விதிகளின் தொகுப்பு 227

12. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வரும் வலி மிகும்.

காட்டிடை+ சென்றான் =
குடி + பிறந்தார் =
காட்டிடைச்சென்றான்.
குடிப்பிறந்தார்.

13. ஆறாம் வேற்றுமைத் தொகையில் முதலில் நிற்கும்
நிலைமொழி அஃறிணையாய் இருப்பின் வலி மிகும்.

குருவி + தலை =
கிளி + கூடு =
தேர் + தட்டு =
நாய் + குட்டி = .
பூனை + குட்டி =
குருவித்தலை.
கிளிக்கூடு.
தேர்த்தட்டு.
நாய்க்குட்டி
பூனைக்குட்டி.

14. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க
தொகையில் வரும் வலிமிகும்.

சிற்றுண்டி + சாலை =
தயிர் + குடம் =
காய்கறி + கடை =
தேர் + பாகன் =
சிற்றுண்டிச்சாலை.
தயிர்க்குடம்.
காய்கறிக்கடை.
தேர்ப்பாகன்.

15. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க
தொகையில் வரும் வலி மிகும்.

பித்தளை + குடம் =
பட்டு + சேலை =
மோர் + குழம்பு =
பித்தளைக்குடம்.
பட்டுச்சேலை.
மோர்க்குழம்பு.

16. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க
தொகையில் வரும் வலி மிகும்.

குழந்தை + பால் =
கோழி + தீனி =
குழந்தைப்பால்.
கோழித்தீனி.