|
17. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க
தொகையில் வரும் வலி மிகும்.
வாய் + பாட்டு =
விழி + புனல் =
|
வாய்ப்பாட்டு.
விழிப்புனல்.
|
18. ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க
தொகையில் வரும் வலி மிகும்.
தண்ணீர் + பாம்பு =
சென்னை + கல்லூரி =
மதுரை + கோயில் =
|
தண்ணீர்ப்பாம்பு.
சென்னைக்கல்லூரி.
மதுரைக்கோயில்.
|
19. தனிக்குற்றெழுத்தை அடுத்து வரும் ஆகாரத்தின் பின்வரும்
வலி மிகும்.
கனா + கண்டான் =
நிலா + பயன் =
சுறா + தலை =
|
கனாக்கண்டான்.
நிலாப்பயன்.
சுறாத்தலை.
|
20. அன்றி, இன்றி என்னும் இகர ஈற்றுக் குறிப்பு
வினையெச்சங்களுக்குப் பின் வரும் வலி மிகும்.
அன்றி + செல்லேன் =
இன்றி + கொடேன் =
|
அன்றிச்செல்வேன்.
இன்றிக்கொடேன்.
|
விதிவிலக்கும் பிறவும்
21. ட,ற, இரட்டித்த நெடில் தொடர், உயிர்த் தொடர்க்
குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வரும் வலி மிகும்.
21.1 மாடு + சாணம் =
தமிழ்நாடு + கலை =
தமிழ்நாடு+போக்குவரத்து =
வீடு + சோறு =
|
மாட்டுச்சாணம்.
தமிழ்நாட்டுக்கலை.
தமிழ்நாட்டுப் போக்குவரத்து.
வீட்டுச்சோறு.
|
|