வினையெச்சம் (Dependent verbal form)
ஓடி விழுந்தது - ஓடி என்பது குறைந்த வினைச்சொல். இதில்
தொழில் முடியவில்லை. ஓடி என்னும் எச்சம் விழுந்தது என்னும்
வினைமுற்றைத் தழுவுவதால் இது வினையெச்சம் எனப்படும்.
உறங்கி எழுந்தான் போய்ப் பார்த்தான்
காண வந்தான் எனக் கூறினான்
இங்குள்ள உறங்கி, காண, போய், என என்பன வினையெச்சங்கள்.
வினையெச்சம், மற்றொரு வினையெச்சத்தையும் பெயரெச்சத்தையும்
வினைமுற்றையும், தொழிற்பெயரையும் வினையாலணையும் பெயரையும்
தழுவும்.
ஓடிவந்த தேடி நிற்கிறான்.
ஓடி என்னும் வினையெச்சம் வந்து என்னும் வினையெச்சத்தைத்
தழுவுகிறது. வந்து என்னும் வினையெச்சம் தேடி என்னும்
வினையெச்சத்தைத் தழுவுகிறது. தேடி என்னும் வினையெச்சம்
நிற்கிறான் என்னும் வினைமுற்றைத் தழுவுகிறது.
ஓடி வந்த பையன்.
ஓடி என்னும் வினையெச்சம் வந்து என்னும் பெயரெச்சத்தைத்
தழுவுகிறது.
தெருவில் ஓடிவிளையாடுதல் கூடாது.
ஓடி என்னும் வினையெச்சம் விளையாடுதல் என்னும்
தொழிற்பெயரைத் தழுவுகிறது.
வழுக்கி விழுந்தவன் எழுந்து நின்றான்.
வழுக்கி என்னும் வினையெச்சம் விழுந்தவன் என்னும்
வினையாலணையும் பெயரைத் தழுவுகிறது.
|