வினையெச்ச வகை
வினையெச்சத்தில் இறந்த கால வினையெச்சம், நிகழ்கால
வினையெச்சம், எதிர்கால வினையெச்சம் என மூவகை உண்டு.
இறந்தகால வினையெச்சம் உ, இ, ய் என்பவற்றை விகுதிகளாகப்
பெற்று வரும்.
செய்து போனான் -
ஆடி ஓடினான் -
போய் நின்றான் - |
(செய் + த் + உ)
(ஆடு + இ)
(போ + ய்) |
நிகழ்கால வினையெச்சம் பெரும்பாலும் அ என்னும் விகுதி
பெற்று வரும்.
செய்யத் சொல்கிறான் -
ஆட வருகிறான் -
படிக்க வேண்டுகிறான் - |
(செய் + அ)
(ஆடு + அ)
(படி + க் + கு + அ)
இதில் கு என்பது சாரியை. |
எதிர்கால வினையெச்சம் இன், ஆல், வான், பான் என்னும்
விகுதிகளும் ஒன்றைப் பெற்று வரும்.
செய்யின் தருவேன் (இன்)
வந்தால் கொடுப்பேன் (ஆல்) |
சொல்வான் புகுவேன் (வான்)
உண்பான் போவேன் (பான்) |
எதிர்மறை வினையெச்சம்
(Negative Dependent Verbal Form)
எதிர்மறுப்பில் வரும் வினையெச்சம் எதிர்மறை
வினையெச்ச மாகும். எதிர்மறை வினையெச்சம் ஆ என்னும்
எதிர்மறை இடைநிலையையும் து, மல், மே என்னும் விகுதியையும்
பெற்று வரும்.
காணாது சென்றான்
காணாது என்பது எதிர்மறை வினையெச்சம். து என்பது எதிர் மறை
வினையெச்ச விகுதி.
|