|
உறங்கிய என்னும் எச்சம் பெயரைத் தழுவுவதால் அது
பெயரெச்சம்எனப்படும்.
படித்த பெண் - இங்கு படித்த என்பது பெயரெச்சம்.
என்ன காலப்பெயரெச்சம்? இறந்தகாலப் பெயரெச்சம்.
ஓடுகிற குதிரை - ஓடுகிற என்பது பெயரெச்சம். என்ன காலப்
பெயரெச்சம்? நிகழ்காலப் பெயரரெச்சம்.
நாளைக்கு ஓடும் பையன் - ஓடும் என்பது பெயரெச்சம்.
என்னகாலப் பெயரெச்சம் எதிர்காலப் பெயரெச்சம்.
பெயரெச்சத்திலும் தெரிநிலைப் பெயரெச்சம் என்னும் குறிப்புப்
பெயரெச்சம் என்றும் இருவகை உண்டு,
அறியாத பையன்-அறியாத என்பது தெரிநிலைப் பெயரெச்சம்.
ஏன்?அறி என்னும் வினைச்சொல் அடியாய்ப் பிறந்தது அது.
இல்லாத பொருள் - இல்லாத என்பது குறிப்புப் பெயரெச்சம்.
ஏன்?இன்மை என்னும் பண்புச் சொல்லடியாய்ப் பிறந்தது அது.
அறிந்த பையன் - அறிந்த என்பது உடன்பாட்டுப் பெயரெச்சம்.
அறியாத பையன் - அறியாத என்பது எதிர்மறைப் பெயரெச்சம்.
அறியாப் பையன் - இத்தொடரிலிருக்கும் அறியா என்பது
ஈறுகெட்டு வந்திருக்கிறது.ஆதலால்,இதனை ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம் என்பர். இதை ஏன் தெரிந்த கொள்ள வேண்டும்?
இங்கே வல்லெழுத்து மிகும் என்பதற்கு இதைத் தெரிந்து கொள்ள
வேண்டும்.
ஈறுகெடாத பெயரெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகாது.
அறியாத குழந்தை.
ஆனால் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லெழுத்து
மிகும்.
அறியாச் சிறுவன்; இல்லாப் பொருள்.
|