|
‘பெரும் வலிமையுடைய களிற்றைப்போல இராக்காலத்தே
தாழிட்ட கதவைத் திறக்க முயன்றதனால் உண்டான ஒலியைக்
கேட்டனம்!’ என்பது பொருள். (குறுத்தொகை-244)
இங்கே முற்றுகரத்திற்குப்பின் வரும் வலி மிகுந்திருத்தல்
காண்க.
இங்கு வல்லெழுத்து மிக்கு வரவேண்டிய தொடர்களின்
பட்டியல் தரப்பட்டுள்ளது. அவற்றைப் படித்துப்படித்துப் பழகிக்
கொண்டால் எவரும் தவறின்றி வல்லெழுத்து மிக்கு வருமாறு
எழுதக்கூடும். படித்துக்கொள்க:
வலிமிகும் தொடர்களின் வரிசை
அரைப்பங்கு
அறிவுப்பஞ்சம்
அணுக்குண்டு
அந்தக்கழகம்
அங்குப்போனார்
அவனுக்குக்கொடுத்தான்
அழுக்குத்துணி
அன்றிச்செய்யேன்
அன்புத்தளை
ஆரம்பப்பள்ளி
ஆண்டுப்போனான்
ஆண்டுக்காலம்
ஆங்குச்சென்றான்
ஆட்சித்தொடக்கம்
ஆலோசனைக்கூட்டம்
இன்றிப்பேசு
இந்தப்பேச்சு
|
இங்குத்தந்தேன்
இசைச்செல்வர்
இடைநிலைப்பள்ளி
இராக்காலம
இராப்பகல்
இரவுக்குறி
இந்தியத்துணைக்கண்டம்
இந்தியத்தூதுக்குழு
இனிக்கேட்பேன்
இடப்பக்கம்
ஈண்டுப்போகிறேன்
ஈங்குக்கொடுத்தேன்
உழவுத்தொழில்
உணவுப்பொருள்
உயர்நிலைப்பள்ளி
உருளைக்கிழங்கு
உண்மைக்கதை |
|