18.
வலி மிகாமைக்குரிய விதிகள்
வல்லெழுத்து மிகாமல் வரும் இடத்தை வலி மிகாமை
என்கிறோம். வல்லெழுத்து மிகும்படி எழுதப் பயிற்சி பெற்றதும்
ஒரு சங்கடம் தோன்றும். வல்லெழுத்து மிகாத இடங்களிலும்
வல்லெழுத்து மிகும்படி எழுதவே எண்ணம் உண்டாகும், ஆதலால்,
விழிப்பாகக் கவனித்து எழுத வேண்டும்.
தமிழ்நாடுக் காங்கிரஸ்
பெரியப் பையன்
தமிழ்ப் பேசும் பகுதி
அன்றையப் பேச்சு
மிக்கப் பேச்சு
|
சிறியப்பெட்டி
முதுப்பெரும் புலவர்
நடைபெற்றப் பொதுக்கூட்டம்
ரயில்வேத்தொழிலாளர்
ஒருக்காலும்
|
இப்பிழைகளை நாளிதழ்களிலும் வெளியீடுகளிலும் காணலாம்.
தமிழ்நாடு + காங்கிரஸ் = தமிழ்நாட்டுக் காங்கிரஸ் என்று வரும்.
சிறிய பெட்டி என்றும், பெரிய பையன் என்றும், நடை பெற்ற
பொதுக்கூட்டம் என்றும், அன்றைய பேச்சு என்றும் இருக்க வேண்டும்.
சிறிய, பெரிய, நடைபெற்ற, அன்றைய என்பவை பெயரெச்சங்கள்,
பெயரெச்சங்களின் பின்வரும் வல்லெழுத்து மிகாது.
முதுபெரும்புலவர் என்றே எழுதவேண்டும். பண்புத் தொகையில்
வரும் வல்லெழுத்து மிகாது.
ஒருகால் என்று எழுதவேண்டும். பெரும்பாலும் முற்றியலுகரத்துக்குப்
பின் வரும் வல்லெழுத்து மிகாது. திருவள்ளுவர் அருளுடையமை
அதிகாரத்தில் ‘பொருளற்றார் பூப்பர் ஒருகால்’
|