எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்
அது பெரிது, இது சிறிது, எது கொடிது?
அவை போயின, இவை சென்றன, எவை
கூவின?
அன்று போனார். இன்று கேட்டார்.
என்று சொல்வார்?
அத்தனை செடிகள். இத்தனை
பலகைகள். எத்தனை பூக்கள்?
அவ்வளவு பருப்பு. இவ்வளவு கடுகு.
எவ்வளவு தந்தார்?
அவ்வாறு கேட்டான். இவ்வாறு
கூறினான். எவ்வாறு செய்தான்?
வந்தபடி பேசினான்.
சொன்னவாறு கேட்டேன்.
ஒரு பொருள், இருதடவை, அறுதொழில், எழு
கடல்,
இரண்டு தூண்கள், மூன்று குழந்தைகள், நான்கு கால்கள்,
ஐந்து சிறுவர்கள், ஆறு கடைகள், ஏழு கடிதங்கள்,
ஒன்பது பூட்டுகள், நீ போ, பல செடிகள், சில கொடிகள்.
ஆனால், பல+பல, சில+சில ஆகிய இவை சேர்ந்து வரும்போது பலபல
என்றும் சிலசில என்றும், பலப்பல என்றும், சிலச்சில என்றும், பற்பல,
என்றும், சிற்சில என்றும் வரும்.
அத்துணைப் பெரிது, இத்துணைச் சிறிய, எத்துணைப் பாடல்கள்
என்று அத்துணை, இத்துணை, எத்துணை என்னும் சொற்களின் பின்
வரும் வல்லெழுத்து மிகுந்து வரும். ஆனால், அத்தனை, இத்தனை,
எத்தனை ஆகிய இவற்றின் பின் வரும் வல்லெழுத்து மிகாது.
இவ் வேறுபாடு தெரிந்து கொள்க.
2. ஓடு, ஓடு என்னும் 3-ஆம் வேற்றுமை உருபுகளின் பின்னும்,
இருந்து, நின்று என்னும் 5-ஆம் வேற்றுமை உருபுகளின் பின்னும்;
அது, உடைய, அ என்னும் 6-ஆம் வேற்றுமை உருபுகளின் பின்னும்
வரும் வல்லெழுத்து மிகாது.
தம்பியொடு பேசினார். பொன்னனோடு போனார்.
3-ஆம் வேற்றுமை உருபுகளின் பின் வரும் வலி மிகாது.
|