பக்கம் எண் :

24நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


உரையாசிரியர்கள்

இறையனார் அகப்பொருள் காலத்திற்குப் பின்பு
கி.பி.12, 13, 14- ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த புகழ்
பெற்ற உரையாசிரியர்கள் இலக்கணச் சூத்திரங்களுக்கும்
இலக்கியச் செய்யுள்களுக்கும் பொருள் எழுதிய முறையில்
உரைநடையைக் காண்கிறோம். 17-ஆம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் வாழ்ந்த சங்கர நமச்சிவாயப் புலவர்
முதலானவர்கள் அவ்வாறே பொருள் கூறும் முறையில்
உரைநடை எழுதினார்கள்.

வழிகாட்டியவர்கள்

உரைநடைக்குக் கருக்கட்டினவர்கள் நமது பண்டை
உரையாசிரியர்களே. அக்கருவைச் சீர்செய்து இக்கால
நிலைக்கு உருப்படுத்திய பெருமை ஐரோப்பிய
பாதிரிமார்களையே சார்ந்தது. கி.பி.17-ஆம் நூற்றாண்டில்
கிறிஸ்தவ சமய ஊழியராய்த் தமிழ்நாட்டில் தொண்டாற்றிய
ராபர்ட் நொபிலி என்ற தத்துவ போதக சுவாமிகள் முழு
உரைநடை நூலை இயற்றி வழிகாட்டினார்கள். கி.பி.18-ஆம்
நூற்றாண்டில் தமிழ் நாட்டில் உரோமன் கத்தோலிக்கச் சமய
ஊழியம் செய்தவரும், தம் தாய் மொழியாகிய இத்தாலி
மொழியுடன் கிரேக்கம், இலத்தீன், போர்ச்சுக்கீசியம், பிரெஞ்சு,
வடமொழி, தெலுங்கு, இந்துஸ்தானி, பாரசீகம், தமிழ் ஆகிய
மொழிகளைப் பயின்றவரும், தொன்னூல் என்னும் தமிழ்
இலக்கணம் இயற்றியவரும், தேம்பாவணிக் காப்பியத்தையும்
பிற சிறு செய்யுள் நூல்களையும் இயற்றியவருமாகிய கான்சன்டைன்
பெஸ்கி என்ற வீரமா முனிவர் ‘பரமார்த்த குரு கதை’ என்ற முழு
உரைநடை நூலை அழகுற இயற்றித் தமிழ் உரைநடைக்கு வழி
காட்டினார். 18-ஆம் நூற்றாண்டினரான சிவஞான சுவாமிகள்
உயர்ந்த உரைநடை நூலை இயற்றினார்கள்.

பிற்காலத்தில்

கி.பி.19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தமிழ்
உரைநடை வளர்ச்சியுற்றது. தாண்டவராய முதலியார் இயற்றிய
பஞ்சதந்திரமும், ஆறுமுகநாவலர் எழுதிய பால பாடங்களும்