உரைபெறு கட்டுரைப் பகுதியில், "அது கேட்டுக்
கொங்கிளங்கோசர் தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு
சாந்தி செய்ய மழைத்தொழில் என்றும் மாறாதாயிற்று" என்று
இன்று நாம் எழுதுவது போன்ற உரைநடை வாக்கியம் உள்ளது.
இது போன்ற வேறு உரைநடை அங்கு மிகுதியாக இல்லை.
இறையனார் அகப்பொருளில்
கி,பி.8-ஆம் நூற்றாண்டில்
இயற்றப்பட்ட இறையனார்
அகப்பொருளில் பிற்கால நக்கீரர் நீண்ட உரைநடையை அழகு
படச் சூத்திரத்துக்கு உரைகூறும் முறையில் - வினாக்களை
எழுப்பி விடை அளிக்கும் வகையில் - எழுதியுள்ளார். அவ்வுரை நடை இது :
"இனிப் புகழ், பொருள், நட்பு, அறன் என்னும்
நான்கினையும் பயக்கும். இது வல்லானாக; என்னை? கற்று
வல்லன் என்பதனின் மிக்க புகழ் இல்லை. உலகத்தாரானும்
சமயத்தாரானும் ஒருங்கு புகழப்படுமாகலான் என்பது.
இனிப்
பொருளும் பயக்கும், என்னை? பொருளுடையாரும் பொருள்
கொடுத்துக் கற்பவராகலின் என்பது. இனி நட்பும்
பயக்கும்;
என்னை? கற்றாரைச் சார்ந்து ஒழுகவே நமக்கும் அறிவு
பெருகுமென்று பலருஞ் சார்ந்து ஒழுகலின் என்பது. இனி
அறனும் பயக்கும்; என்னை? ஞானத்தின் மிக்க கொடை
இன்மையான் என்பது. இது பயன்."
- இறையனார் அகப்பொருள்.
பாரத வெண்பாவில்
கி.பி.10-ஆம் நூற்றாண்டில்
பெருந்தேவனார் இயற்றிய
பாரத வெண்பாவில் ஒரு வெண்பாவிற்கும் மற்றொரு
வெண்பாவிற்கும் இடையே மணிப்பிரவாள நடையில்
உரைநடை காணப்படுகிறது. அவ்வுரைநடை இது: "இவ்வகை
எழுந்தருளிக் காடும் மலையும் கடந்து இரண்டு திவசம்
(நாள்)
வழியில் தங்கி மூன்றாம் திவசம் அஸ்தினபுரம்
புகுந்தான்
ஸ்ரீவாசுதேவன் என்றவாறு."
|