பக்கம் எண் :

22நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


ஆங்கில மொழியைப் படித்த பயனால், தமிழ் மொழியில் இக்கால
உரைநடை தோன்றி வளரலாயிற்று,

"தமிழ்மொழியில் உரைநடையே இருந்ததில்லையா?" என்று
கேட்கும் கேள்வி காதில் விழாமல் இல்லை. தொல்காப்பியர்,
"உரைநடைப்பகுதி வழக்கானது, பாட்டிடை வைத்த குறிப்பும், பாவின்றி
எழுந்த கிளவியும், பொருள் மரபு இல்லாப் பொய்ம்மொழியும்,
பொருளோடு புணர்ந்த நகை மொழியும் என நான்கு" என்று
குறிப்பிட்டுள்ளார்.* ஒரு பாட்டுக்கும் அடுத்த பாட்டுக்கும்
இடையிடையே எழுதப்படும் உரைநடையே பாட்டிடை வைத்து
குறிப்பு என்பது. இப்படித் தகடூர் யாத்திரை என்ற நூல் இருந்ததாய்ச்
சொல்லப்படும். பிற்காலத்தில் இவ்வாறு உள்ளதைப் பெருந்தேவனார்
பாரதத்தில் காணலாம். பாவின்றி எழுந்த கிளவி என்பது பாட்டின்றிச்
சூத்திரத்துக்குப் பொருள் எழுதுவது. பாவின்றி எழுந்த கிளவி என்பதற்கு
இளம்பூரணர் என்ற முதல் உரையாசிரியர். ‘பாக்களை ஒழியத்
தோன்றிய சொல்வகையானும்’ என்று பொருள் கூறினார். இப்பொருளை
நோக்கும்போது முற்காலத்தில் முழு உரைநடை நூல்கள் இருந்திருக்க
வேண்டும் என்பது தெளிவாகிறது. ஆனால் அம்முழு உரைநடை
நூல்கள் அழிந்துபட்டன போலும். பொருளொடு, புணராப்
பொய்ம்மொழி என்பதனால் கற்பனைக் கதை எழுதுவதற்குள்ள
உரைநடையையும், பொருளொடு புணர்ந்த நகைமொழி என்பதனால்
நகைச்சுவை உரைநடையையும் குறிப்பிட்டார் தொல்காப்பியர்.
என்றாலும் அத்தகைய உரைநடை நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

சிலப்பதிகாரத்தில்

முதல் முதலாக, கி.பி.2-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக்
கருதப்படும் சிலப்பதிகாரத்தில் உரைநடையை அருகிக் காண்கிறோம்.
அதில் உள்ள உரைநடையும் ஏறக்குறைய செய்யுள் போலவே
இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் பதிகத்துக்கு அடுத்துள்ள
---------------------------------------------
* தொல்காப்பியம் - செய்யுளியல் 166-ஆம் நூற்பா.