தனியரசா? தவறாக எழுதுவது தனியுரிமையா? இனி
வருங்காலத்தில்
மொழித்தேர்ச்சி இல்லாதவர்கள் இகழப்படுவார்கள்;
புறக்கணிக்கப்படுவார்கள். ஆதலால், யாவரும்
நடைமுறைக்குப்
பயன்படும் அளவில் வழுவின்றி எழுதும் வகையில்
மொழித் தேர்ச்சி
பெற வேண்டுவது இன்றியமையாதது.
உரைநடை இலக்கணம்
எந்த மொழியிலும் உரைநடைதான் பின்னே தோன்றியது;
செய்யுளே முன்னே தோன்றியது. உரைநடை நடந்து வரும்;
செய்யுள்
கற்பனைச் சிறகு கொண்டு பறந்து வரும். சிறந்த சொற்களைச் சிறந்த
முறையில் உள்ளம் கவர உணர்ச்சியுற அமைத்து எழுதுவது செய்யுள்.
பேசும் மொழியை யாப்பிலக்கணத்துக்குரிய எதுகை,மோனை, சீர்,
அடி இவற்றுள் அடக்காது, தெளிவுபட எழுதுவது உரைநடை. பயிற்சி
பெற்றால் ஒருவர் செய்யுள் எழுதலாம்; எளிதாகவும் எழுதலாம்.
அவர் இளங்கோவாதல் இயலாது; காளமேகமாகலாம். கம்பனாதற்குக்
கருவில் அமைந்த திரு வேண்டும். ஒன்றைப்பற்றிய கருத்துகளை
நன்கு தொகுத்துப் பத்தி பத்தியாய் அமைத்து வாக்கியப்பிழை,
சொற்பிழை, சந்திப்பிழை முதலியவை இன்றிப் படிப்போர் உள்ளத்தில்
பாங்குற அமையுமாறு தெளிவாக உரைநடை எழுதுவது சிறிது
கடினமாகும்; எனினும், ஒருவர் முயற்சி செய்தால், நல்ல உரைநடை
எழுத அரிய திறன் பெறலாம்.
தொல்காப்பியத்தில்
தமிழ் மொழியில் சங்க காலம் முதல் 18-ஆம் நூற்றாண்டின்
பிற்பகுதி வரையில் எல்லாவகையான நூல்களும் செய்யுளாகவே
இயற்றப்பட்டன. சோதிடம், மனையடி சாத்திரம், மருத்துவம்
முதலியன செய்யுள் நூல்களாகவே இருக்கப் பலரும்
பார்த்திருக்கலாம். மனப்பாடம் செய்யும் நோக்கத்தாலும், சுருக்கமாக
எழுத வேண்டியிருந்தமையாலும் பலரும் எதையும் செய்யுளிலே
இயற்றி வைத்தனர். கி.பி.18 நூற்றாண்டின்
பிற்பகுதியிலிருந்துதான்
ஆங்கிலேயர் ஆட்சியில், உரைநடை நூல்கள் மல்கிக்கிடக்கும்படியான
|