வேறு + இல்லை =
அங்கு + அங்கு =
என்று + என்றும் =
காசு + ஏது =
நாடு + அற்றோர் = |
வேறில்லை.
அங்கங்கு.
என்றென்றும்.
காசேது?
நாடற்றோர். |
மரபு + ஆகும் =
உழுது + உண்டு =
ஒப்பு + இல்லை =
எழுந்து + இரு =
|
மரபாகும்.
உழுதுண்டு.
ஒப்பில்லை.
எழுந்திரு.
|
சில சொற்களில் முற்றியலுகரத்துக்கும் இப்படியே வரும்.
எடுத்துக்காட்டுகளைக் காண்க.
வரவு + ஏற்பு =
கதவு + அடைப்பு =
செலவு + ஆயிற்று = |
வரவேற்பு.
கதவடைப்பு.
செலவாயிற்று. |
குறிப்பு : குற்றியல் உகரம் வடமொழியாய் இருந்தால் கெடாது.
சம்பு+ஐ=சம்புவை என்றே வரும். (சம்பு-சிவன் என்று பொருள்படும்
வடசொல்.)
இச்சந்தியை நன்கு தெரிந்து கொண்டால், செய்யுளில் வரும்
குற்றியலுகரச் சந்தியைப் பிரித்துப் படித்தறிந்து கொள்ளவும், உரை
நடையில் குற்றிலுகரச் சந்தியைப் பயன்படுத்தவும் திறமை உண்டாகும்.
நாள் + தோறும் =
அவர்கள் + தாம் =
துகள் + தீர் = |
நாடோறும்.
அவர்கடாம்.
துகடீர். |
மேற்குறித்த எளிய சந்தி முறைகளைத் தெரிந்து கொண்டால்,
எவரும் நல்ல முறையில் பிழையின்றித் தமிழ் எழுத வல்லவராகலாம்.
|