சுட்டெழுத்துகளின் பின்னும் எகர வினாவின் பின்னும் யகரம்வரின்
‘வ்’ தோன்றுதல்
அ + யானை =
இ + யானை =
எ + யானை = |
அவ்யானை.
இவ்யானை.
எவ்யானை? |
பிறவற்றின் பின் அந்த அந்த எழுத்தே வருதல்
அ + நூல் =
இ + நாடு =
எ + நூல் =
அ + செடி =
இ + குதிரை =
எ + படை =
அ + ஞாலம் =
இ + ஞாலம் =
அ + மனைவி = |
அந்நூல்.
இந்நாடு.
எந்நூல்?
அச்செடி.
இக்குதிரை.
எப்படை?
அஞ்ஞாலம்.
இஞ்ஞாலம்.
அம்மனைவி. |
இ + மாதர் =
எ + மாதம் =
அ + வீடு =
இ + வேளை =
எ + விதம் =
அ + ஙனம் =
இ + ஙனம் =
எ + ஙனம் = |
இம்மாதர்.
எம்மாதம்?
அவ்வீடு.
இவ்வேளை.
எவ்விதம்?
அங்ஙனம்.
இங்ஙனம்.
எங்ஙனம்? |
திரிதல்
விடியல் + காலை =
பந்தல் + கால் =
தகுந்தால் + போல் = |
விடியற்காலை.
பந்தற்கால்.
தகுந்தாற்போல். |
கெடுதல்
எவ்வாறு+எனின்=எவ்வாறெனின் என்றே வரும். எவ்வாறுயெனின்
என்று எழுதுவது தவறு. நிலைமொழியின் கடைசியில் குற்றியலுகரம்
இருக்க, வருமொழி முதலில் உயிரெழுத்து வந்தால் நிலைமொழியீற்றிலுள்ள
குற்றியலுகரம் கெட்டுப்போக, நிலை மொழியீற்று மெய்யும் வருமொழி
முதலில் இருக்கும் உயிரும் சேர்ந்து விடும்.
|