ஆனால், தீயொளி, பனையோலை என்பனவற்றைப் பிரிக்காமலே
எழுத வேண்டும். பொருள் மயக்கம் ஏற்படாதவாறு உடம்படு
மெய்யைப் பயன்படுத்த வேண்டும்.
ஓரு நூலில் சிற்பயெழில் என்று இருக்கப் பார்த்தேன். இது
தவறு சிற்ப+எழில் = சிற்பவெழில் என்று வரவேண்டும். சிற்ப எழில்
என எழுதப்பட்டிருந்தால் தவறே வந்திராது.
உடம்படுமெய் வரவேண்டிய இடங்கள்
தொகைச் சொற்களில் உடம்படுமெய் வரவேண்டும்.
பூவரசு, மாவிலை, தெருவோரம்.
உடம்படுமெய் வரக்கூடாத இடங்கள்
வியப்பு, துன்பம், மெச்சிப்பேசுவது ஆகிய இடங்களில்
உடம்படுமெய் தேவையில்லை. இப்படிக் கன்னட மொழி
இலக்கணம் கூறுகிறதாம்.
ஆ! ஆ! என்ன செய்தாய்!
ஐயமுண்டாகும் இடங்களிலும் வீணான இடங்களிலும்
உடம்படுமெய் வேண்டுவதில்லை,
சுட்டெழுத்துகளின் பின்னும் எகர வினாவின் பின்னும் உயிரெழுத்துவரின்
‘வ்’ தோன்றி இரட்டித்தல்
அ + உயிர் =
இ + எழுத்து =
எ + அணி = |
அவ்வுயிர்.
இவ்வெழுத்து.
எவ்வணி? |
இந்த ‘வ்’ உடம்படு மெய் அன்று என்றறிக.
|