|
இன்றியமையாத இச் சந்தி முறைகள் தெரியாததனால்
மேற்குறித்த பிழைகள் நேர்கின்றன. தமிழில் தடி எடுத்தவன் தம்பிரான்
என்னும் முறையில் ஒரு சிலர் சொல் போட்டி என்பது போன்ற
புதுப்புணர்ச்சியைப் புகுத்தி வருகின்றனர். இருக்கிற சந்தித் தொல்லை
போதாதென்றா புதுச்சந்தியைப் புகுத்துகிறார்கள் இப்பெருமக்கள்?
இப்புதுச் சந்தி தேவையில்லை. மாணவர்களும் மற்றவர்களும்
இத்தவறான சந்தியை மேற்கொள்ளுதல் கூடாது. யார் வேண்டுமானலும்
எது வேண்டுமானாலும் தமிழ் மொழியில் செய்யலாம் என்று
நினைக்கின்ற - செய்கின்ற - நிலை ஒழிய வேண்டும். புகுத்துவது
எதுவாயினும் தமிழ் முறைக்கு மாறாக இருத்தலாகாது.
கீழ்வருஞ் சந்தி முறைகளைப் படித்துத் தெரிந்து கொள்க.
தோன்றல்
உயிர் முன் உயிர்
வர + இல்லை =
வேலை + ஆள் =
அ + உயிர் = |
வரவில்லை,
வேலையாள்,
அவ்வுயிர். |
உயிர் முன் மெய்
அ + யானை =
இ + நூல் =
எ + வாள் =
அ + கடல் =
இ + படம் =
எ + சங்கு =
அ+ஞாலம் =
இ + மாடு =
எ + ஙனம் = |
அவ்யானை.
இந்நூல்.
எவ்வாள்?
அக்கடல
இப்படம்
எச்சங்கு?
அஞ்ஞாலம்.
இம்மாடு.
எங்ஙனம்? |
|