பக்கம் எண் :

சில சந்தி முறைகள் 259


திரிதல் (மாறுதல்)

1. ம் - ங்,ஞ்,ந், ஆகும். (க,ச,த முன்மட்டும்)

மனம் + களித்தான் =
மரம் + சாய்ந்தது =
பணம் + தேடி =
மனங்களித்தான்
மரஞ்சாய்ந்தது.
பணந்தேடி.

2. ண்-ட் ஆகும். (க,ச,ப முன் மட்டும்)

மண் + குடம் =
மண் + சட்டி =
மண் + பாண்டம் =
மட்குடம்.
மட்சட்டி.
மட்பாண்டம்.

3. ண் முன் த ஆனது ட ஆகும்.

தண் + தமிழ் =
மண் + தலம் =
தண்டமிழ்.
மண்டலம்.

4. ன் - ற் ஆகும். (க,ச,ப முன்மட்டும்)

பொன் + குடம் =
பொன் + சங்கலி =
பொன் + பாடகம் =
பொற்குடம்.
பொற்சங்கிலி.
பொற்பாடகம்.

5. ன் முன் த ஆனது ற ஆகும்.

அவன் + தான் =
பொன் + தோடு =
அவன்றான்.
பொற்றோடு.

6. ள் - ட் ஆகும். (க,ச,ப, முன்மட்டும்)

கள் + குடியன் =
முள் + செடி =
முள் + பழம் =
கட்குடியன்.
முட்செடி.
முட்பழம்.