பக்கம் எண் :

வாக்கிய அமைப்பில் அறிய வேண்டுவன 317


பயிற்சி

கீழ்வரும் வாக்கியங்களில் உள்ள பிழைகளைத் திருத்துக.

1. முயல்பவனது செயல்களில் இறைவன் உதவியால் தானாகவே
வெற்றி பெறும்.

2. இதில் தனி மதிப்பும் பெருமையும் ஏற்படுகிறதா?

3. நான் சென்ற இடமெல்லாம் திருவாசகம் உடன் செல்கிறது.

4. முன்பு மலையாள நாடு செழிப்புற்றிருந்ததற்குத் தென்னை
மரங்களே காரணம்.

5. ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு உண்மையை விளக்குகின்றன.

6. பெரியதும் சிறியதுமான சாமான்களைச் செய்கிறார்கள்.

7. மாடுகள் ஒன்றையும் விடவில்லை,

8. வேலைக்காரி ஒருவள் இன்று மாலையிலோ அல்லது
நாளைக் காலையிலோ வருவாள். (காலையில் கூறியது)

9. இவனுக்கு வீடு ஒன்று அல்லது இரண்டு இருக்கிறது.

திருத்தம்

1. முயல்பவனுடைய செயல்கள்.... தாமாகவே வெற்றி பெறும்.

2. ....ஏற்படுகின்றனவா?

3. ....இடங்கள் எல்லாம் திருவாசகம் உடன் சென்றது.

4. ....தென்னை மரமே காரணம்.

5. .....ஒவ்வொரு உண்மையை விளக்குகின்றது.

6. பெரியனவும் சிறியனவுமான...

7. மாடுகளுள் ஒன்றையும்....

8. ...ஒருத்தி இன்று மாலையிலோ நாளைக் காலையிலோ வருவாள்.

9. ...ஒன்று அல்லது இரண்டு உண்டு.