அமைந்திருப்பது தவறு. ஊர் என்று முதல் வேற்றுமையாய்
அமைக்கவும்.
3. இதனால் நாம் புதியவைகளைக கண்டுபிடிக்க உதவி யாகிறது.
உதவியாகிறது என்னும் பயனிலைக்கு இவ்வாக்கியத்தில் எழுவாய்
இல்லை. ஆதலால், இது நாம் புதியவைகளைக் கண்டுபிடிக்க
உதவியாகிறது என்று திருத்துக.
4. ஆங்காங்கு நிகழும் நீதிகளையும் அநீதிகளையும்
நாளிதழ்களில் வெளியிடப்படுகின்றன.
நீதிகளும், அநீதிகளும் என்றிருந்தால்தான், அவை எழுவாய்களாக
அமையும்.
5. நமது தமிழகம் பல நூற்றாண்டுகளாக மிகுந்த நாகரிகமுள்ள
நாடு என்று யாவரும் அறிந்த செய்தி.
‘என்று’ என இருப்பதை, ‘என்பது’ எனத் திருத்துக. ‘என்பது’
எழுவாயாக இருந்தால்தான் வாக்கியம் சரியாக அமையும்.
6. அவனுக்கும் இத்தகைய தொண்டுகளில் விருப்ப
முள்ளவனாயிருக்கிறான்.
அவனுக்கு இத்தகைய தொண்டுகளில் விருப்பம் உண்டு என்று
வாக்கியம் இருக்க வேண்டும். அல்லது அவனும் இத்தகைய
தொண்டுகளில் விருப்பமுள்ளவன் என்றும் வாக்கியத்தை அமைக்கலாம்.
7. உலக வரலாறானது எல்லா நாடுகளைப் பற்றியும்,
அவைகளில் இருந்தவும் இருக்கிற மக்களைப் பற்றியும் கூறுகிறது.
‘இருந்தவர்களும்’, இருக்கின்றவர்களுமான மக்களைப் பற்றியும்’
என்று திருத்துக.
|