|
சொற்பொழிவுகளைச் சுருக்கமாக வெளியிடுவதற்கு
நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றி எழுதும் முறை அறிவது
இன்றியமையாதது.
நேர்க்கூற்றானது, ‘என்று சொன்னார்’,
‘என்றார்’, ‘எனக் கூறினார்’
என்று முடியும்.
அயற்கூற்றானது, ‘.......
என்பதாய்க் கூறினார்’, ‘.........என்றும்’,
‘........என்றும் கூறினார்’ எனவும் முடியும்.
* * *
நேர்க்கூற்று
என் தந்தையார், "நான்
நாளைக் காலை வருவேன்" என்று
என்னிடம் நேற்றுக் கூறிவிட்டுச் சென்றார்.
அயற்கூற்று
என் தந்தையார் என்னிடம் தாம் மறுநாள் காலை வருவதாய்
முன் நாள் கூறிவிட்டுச் சென்றார்.
* * *
நேர்க்கூற்று
சுசீலை தன் கணவராகிய
குசேலரை நோக்கி, "நாதா! வறுமை
மிகமிகக் கொடியது. அது தலைவன் தலைவியரிடத்து
மனக்கசப்பை
உண்டாக்கும். அது சோம்பலைப் புகுத்தும். அது பாவங்கள்
எல்லாவற்றையும் வருவிக்கும். ஆதலால், நீங்கள் வறுமையைப்
போக்க வழி தேடுவீராக" என்றார்.
அயற்கூற்று
சுசீலை, தன் கணவராகிய
குசேலரிடம், வறுமை மிகமிகக்
கொடியது என்றும் அது தலைவன் தலைவியரிடத்து மனக் கசப்பை
உண்டாக்கும் என்றும் அது சோம்பலைப் புகுத்துவதோடு
பாவங்கள்
எல்லாவற்றையும் வருவிக்கும் என்றும், ஆதலால்
|