பக்கம் எண் :

மாற்றும் வழிகள் 343


இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்று வேண்டப்படுகிறார்கள்"
என்றும் தெருக்களில் மலஜலம் கழித்தலாகாது எனப் பொது மக்கள்
கோரப்படுகிறார்கள்" என்றும் இருக்கக் காணலாம். ‘அதிகாரிகள்
வேண்டுகிறார்கள்’ என்று குறிப்பிட விரும்பாது, அறிவிப்பை
எழுதுகிறவர்கள் இப்படி எழுதுகிறார்கள்.

கட்டுரையில் செயப்பாட்டுவினையை மிகுதியாகப் பயன்
படுத்தினால் தமிழினிமை கெடும் என்றறிக. ஆதலால், செயப்பாட்டு
வினையை இடம் அறிந்து பயன்படுத்த வேண்டும்.

IV. நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றுதல்
(Direct Speech into Indirect Speech)

ஒருவர் நேரில் கூறியவாறே எழுதுவது நேர்க்கூற்று.

ஒருவர் கூறியதை அவர் கூறியவாறே எழுதாமல் நாம் அக்
கருத்தை மேற்கொண்டு கூறுவது அயற்கூற்று

(கூற்று-சொல்), (அயல் + கூற்று = அயற்கூற்று.)

நேர்க்கூற்றில் கூறிய சொற்களின் முன்னும் பின்னும் உள்ள
மேற்கோள் குறி அயற்கூற்றில் இராது என்பதறிக.

நேர்க்கூற்று

அரிச்சந்திரன் முனிவரை நோக்கி, ‘நாட்டை இழப்பினும், என்
நன்மகனை இழப்பினும், இனி வரக்கூடிய நற்கதியை இழப்பினும் நான்
உண்மையையே நவில்வது உறுதி என்று கூறினான்.

அயற்கூற்று

அரிச்சந்திரன் முனிவரை நோக்கித் தான் தன் நாட்டை இழப்பினும்,
தன் நன்மகனை இழப்பினும், தனக்கு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய
நற்கதியை இழப்பினும் உண்மையையே நவில்வதென உறுதி
கொண்டதாய்க் கூறினான்.