பக்கம் எண் :

342நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

இயற்றினார் என்பது செய்வினை. இவ்வாக்கியத்தில்
திருவள்ளுவருக்கு முதன்மை கொடுக்கப்பட்டுள்ளது.

செய்யப்பட்ட பொருளுக்கு முதன்மை கொடுக்கும் வினை
(Passive Verb) செயப்பாட்டுவினை எனப்படும்.

திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது.

‘இயற்றப்பட்டது’ என்பது செயப்பாட்டுவினை. இவ்வாக்கியத்தில்
திருக்குறளுக்கு முதன்மை கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

கீழ்வரும் எடுத்துக்காட்டுகளை ஆழ்ந்து படிக்கவும்.

1. இராமன் இராவணனைக் கொன்றான். - செய்வினை.

இராவணன் இராமனால் கொல்லப்பட்டான். - செயப்பாட்டுவினை.

2. மகனே, வேந்தன் உன்னைக் கட்டினான். - செய்வினை.

மகனே, நீ வேந்தனால் கட்டுண்டாய். - செயப்பாட்டுவினை.

3. நீங்கள் கட்டளையிடுங்கள். - செய்வினை.

உங்களால் கட்டளையிடப்படட்டும். - செயப்பாட்டுவினை.

செய்வினையோடு படு, உண் என்னும் துணைவினைகள்
சேர்ந்தால் செயப்பாட்டுவினையாகும். செய்வினையானது செயப்பாட்டு
வினையாக மாறும்பொழுது இரண்டாம் வேற்றுமையிலிருப்பது முதல்
வேற்றுமையிலும், முதல் வேற்றுமையிலிருப்பது மூன்றாம்
வேற்றுமையிலும் வரும்.

குறிப்பு : எழுவாயை மறைக்கவே இக்காலத்தில் பல
அறிவிப்புகளில் செயப்பாட்டுவினைகள் ஆங்கில முறையை ஒட்டிப்
பயன்படுத்தப் பார்க்கிறோம். "பிராயாணிகள் கண்ட