பக்கம் எண் :

மாற்றும் வழிகள் 341

3. தன்வினைப் பகுதியிலுள்ள மெல்லின மெய்யெழுத்தானது
வல்லின மெய்யெழுத்தானால் தன்வினையானது பிறவினையாக
மாறும்.

3.1 முருகப்பன் நல்வழியில் திரும்புகிறான். - தன்வினை.

எல்லப்பன் அவனை நல்வழியில் திருப்புகிறான். - பிறவினை.

3.2 மகன் தகப்பனுக்கு அடங்கினான். - தன்வினை.

தகப்பன் மகனை அடக்கினான். - பிறவினை.

3.3 அவன் வருந்தினான். - தன்வினை.

அவன் பிறரை வருத்தினான். - பிறவினை.

3.4 அவன் நனைந்தான். - தன்வினை.

அவன் துணியை நனைத்தான். - பிறவினை.

4. தன்வினைப் பகுதி இரட்டிப்பதால் பிறவினையாக மாறும்.

4.1. வெந்நீர் ஆறுகிறது - தன்வினை.

அவள் வெந்நீரை ஆற்றுகிறாள். -பிறவினை.

4.2.மன்னன் தீயவனாய் மாறினான். - தன்வினை.

மன்னன் தீயவனை நல்லவனாய் மாற்றினான். -பிறவினை,

குறிப்பு: சில இடங்களில் தன்வினையானது பிறவினைப் பொருளைத்
தரும். ‘அரசன் கோயிலைக் கட்டினான்’ என்னும் வாக்கியத்தில்
‘கட்டுவித்தான்’ என்பதே பொருள். நடத்தினான், நடப்பித்தான்
என்று பிறவினைகள் வருவதுண்டு. நடத்துவிப்பித்தான் என்றும் பிறவினை
அருகி வருவதுமுண்டு.

III. செய்வினையைச் செயப்பாட்டுவினையாக மாற்றுதல்

செய்த பொருளுக்கு முதன்மை தரும் வினையே செய்வினை
(Active Verb) எனப்படும்.