பக்கம் எண் :

340நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

தன்வினை
(Verb denoting direct action)
பிறவினை
(Causative Verb)
மாணாக்கன் தானாகவே
செய்யும் தொழிலாதலால்,
அது தன்வினையாயிற்று.
படித்தலாகிய தொழில்
ஆசிரியரால் நடைபெறுகின்றதால்,
அது பிறவினையாயிற்று

பிறவினையில் தொழில் செய்யுங் கருத்தாவும், தொழில் செய்ய
ஏவும் கருத்தாகவும் ஆக இரண்டு கருத்தா இருக்கும். ‘ஆசிரியர்
மாணாக்கனைப் படிப்பிக்கின்றார்’ என்னும் வாக்கியத்தில் படித்தல்
தொழில் மாணாக்கனதாகவும், படிக்க ஏவுந் தொழில் ஆசிரியருடைய
தாகவும் இருக்கும் நுட்பத்தைக் காண்க.

II. தன் வினையானது பிறவினையாக மாறும் விதங்கள்

1. தன்வினைப் பகுதியோடு, ‘வி’ என்னும் விகுதியாவது ‘பி’
என்னும் விகுதியாவது சேர்வதால் தன்வினையானது பிறவினையாக
மாறும்.

தன்வினை
செய்தான்
உண்டான்
பிறவினை
செய்வித்தான்
உண்பித்தான்

2. தன்வினைப் பகுதியோடு கு, சு, டு, து, பு, று விகுதிகளுள்
ஏதாவது ஒன்று சேர்வதால் தன்வினையானது பிறவினையாகும்.

தன்வினை
போனான்.
உருண்டான்.
தாழ்ந்தான்.
எழுந்தான்.
அகன்றான்.
பிறவினை
போக்கினான்.
உருட்டினான்.
தாழ்த்தினான்.
எழுப்பினான்.
அகற்றினான்.