காட்டும் இடைநிலை ‘செய்யான்’ என்பதில் ஆகார எதிர்மறை
இடைநிலை முதலில் சேர்ந்து பின்பு கெட்டுவிட்டது. உண்ணாது -
உண் + ஆ + து. இங்கே ஆ என்னும் எதிர்மறை இடைநிலை
கெடாதிருக்கிறது.
இனி உடன்பாட்டு வினையெச்சமானது எதிர்மறை வினை
யெச்சமாக மாறுவது குறித்துப் பார்ப்போம்.
|
உடன்பாட்டு வினையெச்சம் |
எதிர்மறை வினையெச்சம் |
|
கண்டு (போனான்) |
காணாது (போனான்)
காணாமல் (போனான்)
காணாமே (போனான்) |
|
உண்டு (சென்றேன்) |
உண்ணாது (சென்றேன்)
உண்ணாமல் (சென்றேன்)
உண்ணாமே (சென்றேன்) |
| போய் (வாங்கினாய்) |
போகாது (வாங்கினாய்)
போகாமல் (வாங்கினாய்)
போகாமே (வாங்கினாய்) |
இப்படியே காட்டாத இடங்களுக்கும் கொள்க.
உடன்பாட்டு வினையெச்சத்தில் ஆகார இடை நிலையையும் து,
மல், மே என்னும் விகுதிகளையும் சேர்த்தால் அதனை எதிர்மறை
வினையெச்சமாக மாற்றலாம் என்பதறிக.
II. தன்வினையைப் பிறவினையாக மாற்றுதல்
தன்வினை
(Verb denoting direct action) |
பிறவினை
(Causative Verb) |
‘தன்வினை’ என்பது தானே
செய்யும் வினை. |
‘பிறவினை’ என்பது
பிறபொருளால் செய்யும் வினை. |
|
மாணாக்கன் படிக்கிறான். |
ஆசிரியர் மாணாக்கனைப்
படிப்பிக்கின்றார். |
|