|
முதலில் உடன்பாட்டு வினைமுற்றானது எதிர்மறை
வினைமுற்றாக மாறும் வழிகளைப் பார்ப்போம்.
உடன்பாட்டு வினைமுற்று
(Postive Verb) |
எதிர்மறை வினைமுற்று
(Negative Verb) |
|
1. நீ வேலை செய்ய வேண்டும் |
நீ வேலை செய்ய வேண்டா.
நீ வேலை செய்ய
வேண்டுவதில்லை. |
| 2. நான் நாளைக்கு
வருவேன். |
நான் நாளைக்கு வாரேன்.
நான் நாளைக்கு வரமாட்டேன். |
|
3. அவன் நேற்று வந்தான். |
அவன் நேற்று வந்திலன்.
அவன் நேற்று வரவில்லை. |
4. நாலடியார் திருக்குறளுக்கு
முற்பட்டது. |
நாலடியார் திருக்குறளுக்கு
முற்பட்டதன்று அல்லது
நாலடியார் திருக்குறளுக்குப்
பிற்பட்டது |
|
5. உண்பேன். |
உண்ணேன் அல்லது
உண்ணமாட்டேன். |
|
6. பாடுவாள். |
பாடாள் அல்லது பாடமாட்டாள். |
|
7. நடப்பார். |
நடவார் அல்லது நடக்கமாட்டார். |
|
8. (சேவல்) கூவும். |
(சேவல்) கூவாது. |
சொற்கள் மாற்றத்தாலும், அல்லன், அல்லள், அல்லர், அன்று,
அல்ல, அல்லேன், அல்லை, அல்லார், இல்லை, இலன், இலள், இலது,
இல, இலேன், இலோம், மாட்டாள், மாட்டேன், மாட்டோம், மாட்டாய்,
மாட்டீர் போன்றுள்ள சொற்களைச் சேர்ப்பதாலும், எதிர்மறை ஆகார
இடைநிலை சேர்ந்து கெட்டும் கெடாமலும் வருவதாலும் உடன்பாட்டு
வினைமுற்றனாது எதிர்மறை வினைமுற்றாக மாறும். ‘ஆ’ என்பது
எதிர்மறையைக்
|