நேர்க்கூற்று
கண்ணகி, "நான்
பாவியானேன்!" என்று அலறினாள்.
அயற்கூற்று
தான் பாவியானதாய்க்
கண்ணகி கூறி அலறினாள்.
* * *
நேர்க்கூற்று
மன்னன், "கடவுளே! எனக்கு அருள் செய்க"
என்றான்.
அயற்கூற்று
மன்னன் கடவுளை அருள் செய்யுமாறு
வேண்டினான்.
* * *
நேர்க்கூற்று
நாவுக்கரசர், "என்
கடன் பணி செய்த கிடப்பதே" என்றார்.
அயற்கூற்று
நாவுக்கரசர், தம் கடன்
பணி செய்து கிடப்பதாகும் என்றார்.
* * *
நேர்க்கூற்று
என் தந்தையார், "நீ
அதைச் செய்யாதே" என்றார்.
அயற்கூற்று
என் தந்தையார் யான்
அதைச் செய்யக் கூடாதெனக்
கட்டளையிட்டார்.
* * *
நேர்க்கூற்று
"ஐயோ! அந்தக் கப்பல்
கடலில் மூழ்கி விட்டதே" என்றான்
ரகுராமன்.
அயற்கூற்று
ரகுராமன் அந்தக் கப்பல்
கடலில் மூழ்கிவிட்டதாய்க் கூறி
மிகவும் வருந்தினான்.
|