பக்கம் எண் :

347மாற்றும் வழிகள் 347

நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றும்பொழுது கீழ்வருமாறு
சொற்கள் மாறுதலடையும்.

நேர்கூற்று
இது
இவை
இன்று
இப்பொழுது
இங்கு
இதனால்
நாளை
நேற்று
அயற்கூற்று
அது
அவை
அன்று
அப்பொழுது
அங்கு
அதனால்
மறுநாள்
முன்நாள்

குறிப்பு : நேர்க்கூற்று, பல வாக்கியங்களைக் கொண்டதாயிருப்பின்
அதனை அயற்கூற்றாக மாற்றுங் காலத்தில் ‘என்றும்’ என்கிற
இணைப்புச் சொல்லைச் சேர்த்தெழுதுக. ஒரு வாக்கியமாக இருப்பின்
‘ஆய்’ என்னும் சொல்லை இணைத்து எழுதுக. அயற்கூற்றுக்கு
மேற்கோள் குறியிடலாகாது.

நீண்ட பேச்சை வெளியிட வேண்டுமென்றால் நேர்க்கூற்றாக
எழுதுவதே நன்று. கீழ்வருவதைக் காண்க:

சொற்பொழிவாளர் கூறியதாவது :-

"நாம் அனைவரும் நாட்டுக்குத் தொண்டு செய்ய வேண்டும்;
சிற்றூர்கள் முன்னேறப் பாடுபடவேண்டும்; இந்தியாவிலுள்ள ஐந்து
லட்சம் கிராமங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும்."

இவ்வாறு முக்கால் புள்ளியோடு கோடிட்டு எழுதும்போது
நேர்க்கூற்றின் முடிவில் ‘என்றார்’ என்று முடிக்கக் கூடாது; மேற்கோள்
குறியுடன் முடித்துவிட வேண்டும்.