பக்கம் எண் :

348நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


V. ஒரே கருத்தை மூன்று விதமாக மாற்றிக்கூறுதல்

(1) நீ பொய் சொல்கிறாய்.

(2) நீ சொல்வது உண்மையன்று.

(3) நீ சொல்வது உண்மைக்கு மாறுபட்டது.

* * *

(1) நீ பாடுபட்டு உழைத்தால்தான் எந்தச் செயலிலும்
வெற்றி பெற இயலும்.

(2) நீ பாடுபட்டு உழையாமல் எப்படி எச்செயலிலும் வெற்றி
பெற இயலும்?

(3) நீ பாடுபட்டு உழையாமல் எச்செயலிலும் வெற்றி
பெறுதல் அரிது.

* * *